1.எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா..
( யார் மீதோ இருக்கும் கோவத்தை ஏன் என் மீது கொட்டுகிறாய்)
2.பனமரத்துல தேள் கொட்டுனா தென்ன மரத்துல நெறி கட்டுச்சாம்..
(ஒருவரை திட்டினால் இன்னொருவருக்கு வலிப்பது )
3.ஆத்த கண்டு ஊத்து இரைக்கல, அம்மிய கண்டு மிளகாய் அரைக்கல..
(யாரையும் நம்பி நாங்க எதையும் செய்யவில்லை )
4.கிடக்கு கிடக்குன்னு பார்த்தா நீ கிழவன தூக்கி மணையில வைக்கற..
(போனா போகட்டும்ன்னு சும்மா இருந்தா நீ என் பொறுமையை சோதிக்கற - எல்லை மீறி நடப்பது )
5.நரிக்கு நாட்டாமை பதவி கொடுத்தா, கெடைக்கு எட்டாடு கேக்குதாம்..
(கொடுக்க கூடாதவர்களுக்கு , அதிகாரம் கொடுத்தால் அதிகம் ஆடுவார்கள் )
6.கேவூர்(கேழ்வரகு) ல நெய் வடியுதுன்னா, கேட்பாருக்கு மதி எங்கே?
(யார் எதை சொன்னாலும், யோசிக்காமல் அப்படியே நம்புவது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக