தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்??


பாலில் நெய் மறைந்திருப்பதை போல எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவனை வணங்கலாம் என்பது ஒரு கருத்தாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

ஒரு துணியை வெயிலில் காயப்போட்டால் உலர்ந்து போகும். அதே துணியை ,ஒரு லென்சின் கீழ் வைப்பதால் கருகிவிடும். சூரியக் கதிர்கள் ஒன்றுதான். ஆனால் அது குவியும் போது சக்தி அதிகமாகிறது. அது போல வெளி இடங்களை விட கோயிலில் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

இறை வழிபாட்டுக்கு முக்கியத் தேவையே மன ஒருமைப்பாடு தான்.அந்த சமயத்தில் செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். இது மட்டுமன்றி, கோயிலுகளுக்கு மனசுத்தமுடைய அடியார்கள் பலர் முற்காலத்தில் வந்து சென்றுள்ளனர்.

நல்லவர்களின் பாதம்பட்ட இடத்தில் நின்றாலே, நம் பாவங்கள் கருகிப்போகும். கோயிலில் உள்ள படிகட்டுகள் கூட அடியவர்களின் திருவுருவங்கள் என்று கூறப்படுவதுண்டு. எனவே வெளியிடத்தில் கடவுளை பிராத்தித்தாலும் வாரம் ஒரு முறையாவது கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக