இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டுருந்தனர். அப்போ அவங்களுக்குள்ள சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு நண்பர் பளார்னு இன்னொரு நண்பரின் கன்னத்தில் அறைந்தார். கன்னத்தில் அரை வாங்கிய நண்பர் கொஞ்சம் வருத்தப்பட்டு எதுவும் பேசாம மணலில் "இன்னிக்கு என் நண்பன் அறைஞ்சுட்டான்னு" எழுதினார்.
தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும் போது ஒரு பாலைவனச்சோலை தென்பட்டது. அங்கே அவங்க இரண்டு பேரும் குளிக்க நினைச்சுஇருக்குற குட்டையில் இறங்கினாங்க. அறை வாங்கிய நண்பர் சகதில மாட்டிக்கிட்டு அந்த சகதி மண்ணு உள்ளே இழுக்க கத்தினாரு. உடனே பக்கத்துல இருந்த நண்பர் கையை புடிச்சு இழுத்து காப்பாத்தினாரு.
சகதியிலிருந்து வெளியே வந்த பிறகு பக்கத்துல உள்ள கல்லுல "என் நண்பன் என் உயிரை காப்பாத்திட்டான்" அப்படின்னு எழுத, டேய் நீ முன்னாடி அறை வாங்கும் போது மண்ணுல எழுதின இப்போ கல்லுல எழுதுற... என்ன காரணம் அப்படின்னு கேட்டாரு ? அதுக்கு இந்த நண்பர் யாரவது நம்மை வருத்தப்பட செய்தால் அதை மண்ணுல எழுதணும், அது மன்னிப்பு என்கிற காத்து அடிச்சு நம்மை மனசுலேந்து வெளியே போகும். இது மாறி நல்ல விஷயங்களை கல்லுல எழுதினா எந்த காத்துனாலும் அழிக்க முடியாது, நம்ம மனசுல என்னைக்கும் பசுமையா நினைவில் இருக்கும்.
நம்ம வாழ்க்கைல உள்ள மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் மனசுல வெச்சுட்டு கவலை தந்த விஷயங்களை மறந்துருவோம்... சந்தோஷமா வாழலாம்.
மொழி மாற்றம் செய்த கதை...
-ஆயிஷாபாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக