பச்சக் குழந்தையும் புரியும் படியான விளக்கம்
ஒரு சிறுவன் தன் தந்தையிடம் அரசியல் அராஜகம் என்றால் என்ன என்று கோட்டான்.
தந்தை:
அதை உனக்கு இந்த வயதில் சொல்லிப் புரியவைக்க முடியாது மகனே. எனினும் விளங்கும் வகையில் கதையாக உனக்கு சொல்கிறேன் கேள்.
நான் வீட்டு செலவினங்களுக்கு பணம் கொடுக்கிறேன். எனவே என்னை முதலாளித்துவம் என்று வைத்துக்கொள்.
உன் தாய் வீட்டு விவகாரங்களை கவனிக்கிறாள். எனவே உன் தாயை அரசாங்கம் என்று வைத்துக்கொள்
நீ உன் தாயின் பொறுப்பில் இருக்கின்றாய். எனவே உன்னை குடிமக்கள் என்று வைத்துக்கொள்
உனக்கு ஒரு குழந்தை தம்பி இருக்கிறான். அவன் எமது எதிர்பார்ப்பு. அவனை எதிர்காலம் என்று வைத்துக்கொள். எங்களிடம் சேவை செய்யும் வேலைக்காரியை மனித வளம் என்று வைத்துக்கொள்.
இனி நீ போய் நன்கு சிந்தித்துப்பார். சில வேலை உன் கேள்விக்கு விடை கண்டுகொள்வாய்.
சிறுவன் அன்று இரவு தூங்க முடியாமல் குழம்பிப்போய் எழுந்து விட்டான்.
அப்போது குழந்தை அழும் சப்தம் கேட்டது. எழுந்து சென்று பார்தான். குழந்தையின் அணையாடை ஈரமாக இருந்தது. அது தன்னை தானே அசுத்தப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானித்தான்.
ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லுவோம் என்று வந்தான். ஆனால் அம்மா ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தாள். எழுப்ப முடியவில்லை. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் பக்கத்தில் அப்பாவையும் காணவில்லை.
அப்பாவை தேடினான், அப்போது வேலைக்காரியின் அறையில் சிரிப்பும் கிசுகிசு சப்தமும் கேட்டது. கதவின் இடுக்கால் எட்டிப் பார்த்தான் அங்கே தந்தை வேலைக்காரியுடன் சல்லாபத்தில் இருக்கக் கண்டான்.
அடுத்த நாள் மகன் தந்தையிடம்; கூறினான். தந்தையே அரசியல் அராஜகம் என்றால் என்ன என்பததை மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டடேன்.
தந்தை ஆச்சரியத்துடன் எப்படி?! சொல்லு பார்க்கலாம்?
மகன் :
முதலாளித்துவம் மனிதவளத்துடன் லீலைகளில் ஈடுபடும்போதும் அரசாங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் சுகம் காணும்போதும் குடிமக்கள் புறக்கணிக்கப்பட்டு திக்குத் தெரியாமால் தடுமாறுமாறுவார்கள். எதிர்காலம் துர்நாற்றம் வீசும் சகதில் வீழ்ந்துவிடும். அப்போது அரசியல் அராஜகம் தொடங்கிவிட்டது என அர்த்தம்.
தந்தை திகைத்துப் போனார்.
மொழியாக்கத்திற்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக