தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 செப்டம்பர், 2013

சிந்திக்க வைக்கும் சீனப் பழமொழிகள் சில!


1. இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!

2. தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மெüனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.

3. ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்..

4. ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!

5. கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.

நன்றி - அமீனா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக