தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 செப்டம்பர், 2013

காரமான... கடுகு சிக்கன் குழம்பு !


எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் சிக்கன் குழம்பு வைப்பது போல் உள்ளதா? சற்று வித்தியாசமான சிக்கன் குழம்பு ரெசிபி கிடைக்காதா என்று ஏங்குகிறீர்களா? அப்படியெனில், ஒரு அருமையான பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசிபி கிடைத்துள்ளது. அதன் பெயர் கடுகு சிக்கன் குழம்பு. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் அதிகப்படியான வெள்ளை கடுகைப் பயன்படுத்துவது தான். சரி, இப்போது அந்த கடுகு சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ சிக்கனை ஊற வைப்பதற்கு... எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/2 கப் கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வெள்ளை கடுகு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 உப்பு - தேவையான அளவு குழம்பிற்கு... கடுகு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் வெங்காயம் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வெள்ளை கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் - 3 கப் செய்முறை: முதலில் சிக்கனை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் 4 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள சிக்கனில், அரைத்த பேஸ்ட் மற்றும் சிக்கனை ஊற வைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, சர்க்கரையை போட்டு கரைய விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்கிவிட வேண்டும். அடுத்து, ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, 8-10 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு பேஸ்ட், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான கடுகு சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக