தந்தை வேண்டாம்,
பெயரின் முதல் எழுத்து மட்டும் வேண்டும் !
தந்தை வேண்டாம்,
சேர்த்து வைத்த சொத்து மட்டும் வேண்டும் !
தந்தை வேண்டாம்,
சேர்த்து வைத்த புகழ் மட்டும் வேண்டும் !
தந்தை வேண்டாம்,
இன்னாரின் மகன் என்று சொல்லிக்கொள்ள மட்டும் வேண்டும் !
தந்தை வேண்டாம்,
தாத்தனாக மட்டும் வேண்டும் !
தந்தை வேண்டாம்,
கட்டிய வீடு வேண்டும் !
தந்தை வேண்டாம்,
மனைவி(அம்மா) மட்டும் வேண்டும் வேலைக்காரியாக !
இளமை காலம் முழுவதும் உனக்காக உழைத்தேன், முதுமையில் முதியோர் இல்லத்தில் முடங்கிக் கிடக்கிறேன் உயிர் இருந்து உயிரற்ற உடலாய் !
-- நந்தமீனாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக