தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 2, 2013

சனாதன தர்மத்தில் (மனு தர்மத்தில்) கூறப்பட்டுள்ள சில தண்டனைகள் வருமாறு:

பார்பனனை தாக்கினால்:
பார்பனன் சூத்திரன் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் , பார்பனனை எந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் (சூத்திரனின்) அந்த அந்த உர்ப்புகளை குறைப்பதே தக்க தண்டனை ஆகும்.

பார்பனனுக்கு சமமாக அமர்கிற சூத்திரனுக்கு உயிருக்கு தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடேற்றுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் துரத்துக.

பார்பனனை காரி உமிழ்ந்தால் உமிழ்ந்தவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்திடு.

சூத்திரன் பார்பனனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி இவற்றை பற்றி இழுத்தால் அவன் கையை துண்டித்திடுக. பார்பனனை கடுமையாக வைத்தால் சூத்திரன் நாக்கை அறுத்து எறியவும். பார்பனரின் குளத்தை குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீள கம்பியை பழுக்க காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.

கூடா ஒழுக்கம்:
விருப்பமற்ற தன் குலத்தவளை வலிந்து கூடுவோன் குறியை அறுத்து அவனைக் கொன்றிடுக. (இது மற்றவருக்கு தண்டனை).

தன் இனத்தவலை அவள் விருப்பத்துடன் பிராமணன் புணர்ந்தால் தண்டம் ஐநூறு பணம். அவள் கற்புடையவள் ஆயின், அவளை வலியப் புணர்ந்தால் தண்டம் ஆயிரம் பணம். (இது பிராமணனுக்கு).

பிராமணனை விரும்பி ஒருத்தி கூடினால் அவனுக்கு தண்டனை இல்லை. அவளே தாழ்ந்த குலத்தவனை கூடினால் தண்டித்து அடக்குக.

பாதுகாப்பற்ற பிராமணப் பெண்ணை சூத்திரன் வலியப் புணர்ந்தால் அவனுடைய ஆணுறுப்பை அறுக்க. வைசியனுக்கு ஐநூறு பணம். சத்திரியனுக்கு ஆயிரம் பணம்.
காவல் இருந்தபோதும், பிராமணப் பெண்ணை வலிய புணருவோரின் சொத்தெல்லாம் பறித்து அங்கத்தை (ஆண்குறியை) துண்டித்திட வேண்டும்.

கற்புடைய சூத்திரப் பெண்ணை வலிய கூடும், சத்திரிய, வைசியர்க்கு, தண்டம் ஆயிரம் பணம்.
பிராமண சத்திரிய வைசிய பெண்ணை சூத்திரன் வலிந்து கூடினால், அவனுக்கு மரண தண்டனை வழங்குக.

பிராமணன் கற்புடைய சத்திரிய வைசிய பெண்ணை வலியப் புணர்ந்தால் அவனுக்கு ஆயிரம் பணம் வரை தண்டனை தருதல் போதும். கற்பற்ற சத்திரிய வைசிய பெண்ணை பிராமணன் புணர்ந்தால் தண்டனை ஐநூறு பணம். சண்டாளியை புணரும் பிராமணனுக்கு தண்டனை ஆயிரம் பணம்.

ஒரு குற்றத்திற்கு சனாதனம் (ஹிந்துத்துவா) எப்படி தண்டனைகளை பார்பனனுக்கு ஒரு சட்டம் பாமரனுக்கு ஒருசட்டம் என்று பிரித்து வைத்துள்ளது என்பதை பாருங்கள்.

மேலே உள்ள அனைத்தும் மனுதர்மம் என்னும் சனாதநியத்தின், பார்ப்பனியர்களின் (ஹிந்துத்துவா) அரசியல் அமைப்பு சட்டம்.

இப்படி கேவலத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டு அடுத்தவர் குறித்து புலம்புகிறது பார்ப்பனீயம்.


எனது கருத்து:பார்ப்பனியனுக்கு மனுசாத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ள நெறிகளையும் அவன் பின்பற்ற வேண்டிய கடமைகளையும் சொன்னீர்களானால்,அவனின் சொத்துரிமை பற்றியும் கட்டடுப்பாடுகள் பற்றியும் விபரித்தீர்களானால் வர்ணத்தில் சூத்திரனின் கடமை என்ன என்பதையும் மற்ற மூன்று வர்ணங்களும் என்னென்ன கடமைகள் கொண்டவை என்பதையும் நேரம் கிடைக்கையில் எழுதுவீர்கலானால் ஜாதி எந்த வர்ணத்தில் உண்டு என்பதையும் மறைக்காமல் குறிப்பிடுவீர்களானால் நியாயம் சொல்லலாம்!!நமக்கு சார்பானவற்றை சொல்வதால் மட்டும் நமது பக்கம் நியாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை அல்லவா!?? 

No comments:

Post a Comment