தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

சோதிடந்தனை இகழ்!!


சோதிடந்தனை இகழ்.”
-பாரதி can you explain this why bharathi say சோதிடந்தனை இகழ்.” திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்
.. நாள் என் செயும்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடினே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக