வேதங்களின் விஞ்ஞான ரகசியங்கள்
எல்லோருடைய காட்சிக்கு ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கோளாறுகளோ மற்ற புறக் குறைப்பாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.
மரணத்திற்கு பிறகு சில உயிர்கள் மனித உடம்பை பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றன. வினைபயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும். ... மரணத்திற்குப் பின்னால் உயிரின் நிலை:
ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்தந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.
-
யஜுர்வேதம்----கட உபநிடதம்.
ஒருவனைக் கண்ணைக் கட்டி காட்டில் திருடர் கொண்டு போய் விடுவது போல், முன் செய்த கருமங்கள் நமது ஞானத்தை மறைத்து ஆசைகளாகிய மோகக் கட்டுகளால் கண்ணைக் கட்டி, உலகம் என்ற காட்டில் நம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நாம் இருக்கும் இடம் எது, நம்முடைய ஊருக்கு திரும்பிப்போக வழி எது என்றறியாமல் பயத்திலும் மயக்கத்திலும் கிடக்கிறோம். தகுந்த ஆசிரியன் கிடைத்தக் கட்டுகளை அவிழ்த்தால் கண்கள் திறந்து, வழிதேடி ஊர்போய் சேரலாம். இல்லாவிடில் எந்த முயற்சியும் பயன் தராது.
தண்ணீரில் போட்ட உப்பு தண்ணீரில் கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் போனாலும் எப்படி தண்ணீர் முழுவதிலும் வியபித்து இருக்கிறதோ, அப்படியே இவ்வுலகில் பரம்பொருள் மறைந்து நிற்கிறது.அதுவே ஸத்து. அதுவே ஆன்மா. நீயும் அதுவே (தத் -த்வ-மஸி) -
ஆலம் பழம் ஒன்றைக் கொண்டவா. 'இதோ ஐயனே.' 'அதைப் பிள.' 'பிளக்கப்பட்டது ஐயனே'. 'அங்கு என்ன காண்கிறாய்'. 'அணுவடிவான விதைகள், ஐயனே!' 'குழந்தாய், அவற்றுள் ஒன்றைப் பிள.' 'பிளக்கப்பட்டது ஐயனே'. 'அங்கு என்ன காண்கிறாய்?' 'ஒன்றுங் காணவில்லை'. உன் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சிறு ஆலவிதைக்குள் நுட்பமாக இலைகளும் கிளைகளும் விழுதுகள் கொண்ட ஆலமரம் எப்படி அடங்கியிருக்கிறதோ அவ்வாறே உலகம் முழுவதும் ஆத்மா சக்தியில் அடங்கியிருக்கிறது (தத் -த்வ-மஸி)
சாம வேதம் ...... சந்தோக்கியோபநிஷத்து.
அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால் மரணத்தைக் கடந்து அருவ வழிபாட்டால் இறவா நிலையை அடைகிறான். -
எப்போது இருதயத்திலுள்ள முடிச்சிகள் எல்லாம் இங்கேயே அவிழ்ந்து போகின்றனவோ அப்போதே சாகும் இயல்புடைய மனிதன் சாகாதவனாகின்றான்.
யஜுர் வேதம் ..... கட உபநிஷதம் ..
ஆன்மாவைத் தேடுபவர்கள் தவம், பிரம்மச்சரியம், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவர்கள் சூரியப் பாதையை அடைகின்றனர். இந்தப் பாதை ஆற்றல்களின் உறைவிடம், அழிவற்றது, பயமற்றது. இந்தப் பாதையே லட்சியம். இந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆன்மாவைத் தேடாதவர்கள் இந்தப் பாதையை அடைவதில்லை.
அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம் ....
அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயகுகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சு விடுகின்ற, இமைக்கின்ற அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன. தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது அது. போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.
அதர்வணவேதம் ...... முண்டக உபநிஷதம்
வேதங்களின் சிறப்பு என்ன?' 'தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெறும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள் என்கிறார். வேதங்கள் இறை வாக்காக இருக்கலாம், இறைவனின் மூச்சாக இருக்கலாம். ஆனாலும் அவை இறைவன் அல்ல. இறைவனை அடைவது மட்டுமே உயர்ந்தது, மேலானது. ----
சுவாமி விவேகானந்தர்.....
அதர்வண வேதம் .......முண்டக உபநிஷதம்.......
1.1.5. ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல், ஜோதிடம் போன்றவை சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அழிவற்றவராகிய இறைவன் எந்த அறிவால் அடையப்படுகிறாரோ அது உயர்ந்த அறிவு.
— with சுப்ரமணியன் கிருஷ்ணன்.எல்லோருடைய காட்சிக்கு ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கோளாறுகளோ மற்ற புறக் குறைப்பாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக