தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!
**************************
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்..
.கெட்ட கொலஸ்ட்ரால் ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக