உங்களுக்கு தெரியுமா?
1. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் இரண்டே ஸ்தலங்கள் - ஸ்ரீ ரங்கம், அன்பில்
2. 108 வைணவ திவ்ய தேசங்களில் துர்கை அன்னை அருல்பாலிக்கும் ஸ்தலம் - திருகோவிலூர் திருவிக்ரமஸ்வாமி, விழுப்புரம்.
3. 108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் தெற்கு நோக்கி இரண்டே ஸ்தலங்கள் - ஸ்ரீ ரங்கம், திருச்சிறுபுலியூர் க்ருபாசமுத்திரபெருமாள் (திருவாரூர்)
4. 108 வைணவ திவ்ய தேசங்களில் தாயாருக்கு முதலிடம் அளிக்கும் 3 ஸ்தலங்கள் - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், புண்டரீகவள்ளி தாயார், திருவெள்ளறை வஞ்சுளவள்ளி தாயார், நாச்சியார் கோவில்
5. பைரவர் சன்னதி உள்ள ஒரே பெருமாள் கோவில் - தாடிக்கொம்பு வரதராஜ பெருமாள் கோவில், திண்டுக்கல்
6. எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும் ஆனால் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கும் ஒரே திவ்ய தேசம் - திருவெக்கா சொன்னவண்ணம் செய்த பெருமாள், காஞ்சீபுரம்.
7. 108 வைணவ திவ்ய தேசங்களில் உற்சவத்தின் போது பெருமாள் விபூதி அணியும் ஸ்தலம் - லோகநாதப்பெருமாள், திருக்கண்ணங்குடி (திருநீரணி விழா, இந்த விழா மூன்றேமுக்கால் நாழிகை மட்டும் நடக்கும்)
8. 108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருல்பாலிக்கும் ஒரே ஸ்தலம் - அஷ்டபுஜபெருமாள், காஞ்சீபுரம்
9. 108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு பதிலாக தாயார் சொர்க்கவாசலை கடக்கும் ஸ்தலம் - அழகிய மணவாளபெருமாள், உறையூர்
இங்கே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை திறப்பதில்லை மாறாக மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் திறக்கின்றனர் அதிலும் கமலவல்லி நாச்சியார் தான் சொர்க்கவாசலை கடக்கிறார்.
10. 108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மூலஸ்தானதில் சிவபெருமனின் வாகனமான நந்தியுடன் (நந்தி பெருமாளை வணங்கியவாரு இருப்பார்) காட்சி தரும் ஒரே ஸ்தலம் - திருஜெகநாதனபெருமாள், நாதன்கோயில் எனப்படும் நந்திபுர விண்ணகரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக