தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூலை, 2013

குங்குமம்..!


குங்குமம்..!

சுத்தமான குங்குமம், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் புனிதமானது என்று நம் கலாசாரத்தில் கருதப்படுகிறது. அதற்கென்று ஒரு குறிப்பி ட்ட தன்மை உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வது நம்முடைய நல்வாழ்விற்கு மிகவும் முக்கியம். பெரும்பாலானவர்கள் நல்வாழ்வு என்றாலே செல்வ வளம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் குங்குமத்தை பயன்படுத்தி, உலகியல் வாழ்க்கையில் நலனைத் தேடுகிறார்கள்.இரண்டு தன்மைகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த நம் முந்தைய தலைமுறைகள், வீட்டுப் பெண்கள் குங்குமத்தையும் ஆண்கள் விபூதியையும் பூசிக் கொள்ளுமாறு முறை செய்தனர். ஒன்று விடுதலையையும் இன்னொன்று நல்வாழ்வையையும் தரக்கூடியது.

ஆனால், இப்போது எல்லா பெண்களும் குங்குமத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் (ஸ்ட்டிக்கர்) பொட்டு வைக்கிறார்கள். என்ன செய்வது? இப்போது எல் லாமே பிளாஸ்டிக்கில் வருகிறது. விபூதிக்கு பதிலாகக்கூட வெள்ளை பிளாஸ்டிக்கை உருவாக்குவார்களோ என்னவோ! சிவப்பு பிளாஸ்டிக்கை வைத் துக்கொள்ளும் போது, ஏன் வெள்ளை பிளாஸ்டிக் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூட சிலர் கேட்கலாம். நீங்கள் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி, நம்மைச் சுற்றி என்ன இருந்தாலும் சரி, நமது உடல், நமது மனம், சக்திநிலை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது.

இந்த விஷயங்களெல்லாம் நன்றாக நடப்பதற்கு நாம் சில தொழில்நுட்பங் களை, கருவிகளை உருவாக்கியுள்ளோம். நம் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு, விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதென்பது ஒருவித தொழில்நுட்பமாகும். எனவே எதையும் வைத்துக் கொள்ளவில்லை என்றால்கூட பரவாயில்லை. ஆனால், பிளாஸ்டிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இப்படிச் சொல்வதற் காக சிலர் என்னுடன் சண்டையிடுவார்களோ என்னவோ?

இன்று அது பெரிய வியாபாரம் அல்லவா? ஆனால், பிளாஸ்டிக் வைத்துக் கொள்வது உங் கள் மூன்றாவது கண்ணை நீங்களே மூடிக்கொண்டு திறக்க விரும்பாததைப் போன்றது. நீங்கள் விபூதி, குங்குமம் அல்லது மஞ்சள், இதில் எதையா வது வைத்துக்கொள்ளலாம். அல்லது எதுவும் பிடிக்காவிட்டால் எதையுமே வைத்துக்கொள்ளாமல் கூட இருந்துவிடலாம். குறைந்தது, பிளாஸ்டிக்கையாவது தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக