தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஜூலை, 2013

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் !!


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் 
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
------------------------------------------------------
இயற்றியவர்:- கவிஞர் வாலி
பாடியவர்: டி.எம்.எஸ்


ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு ... )
துன்பம் வாராத நிலை தன்னை சேர்க்கும்.
--------------------------------------------------

கேட்க : -http://www.youtube.com/watch?v=6yivzkPkStc#at=11
இயற்றியவர்:- கவிஞர் வாலி
பாடியவர் :- டி. எம். ‪#‎செளந்தரராஜன்‬
--------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக