தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூலை, 2013

காமம் அசிங்கம் அல்ல: சத்குரு – பகுதி 3

காமம் அசிங்கம் அல்ல: சத்குரு – பகுதி 3

Sadhguru-AnandaAlai1

July 24, 2013 10:22 pm பதிந்தவர் 
மிகப் பெரிய உருவம் கொண்ட யானை முதல் நம் கால்களுக்குள் புகுந்து செல்லும் சுண்டெலி வரை என அனைத்து உயிர்களும், குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும்தான் இணை சேர்கின்றன. ஆனால் மனிதன் ஆறறிவு கொண்டவன் இல்லையா?! அவனே முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிட்டது இயற்கை. ஆனால் மனிதனின் மூளை முழுவதையும் காமம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன் இந்த நிலை. சத்குரு பேசுகிறார்…

சத்குரு:

நீங்கள் குழந்தையாக இருந்தபோது, நீங்கள் ஆணா? பெண்ணா? என்பது ஒரு விஷயமாக இருக்கவில்லை. ஆனால் ஹார்மோன்கள் உங்களுக்குள் செயல்பட துவங்கிய வயதிலிருந்து, உங்களால் உலகைக் கடந்த ஒன்றை நினைக்க முடியவில்லை. உங்களின் அறிவு மொத்தமாக உங்களுடைய ஹார்மோன்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
உங்கள் ஹார்மோன்களில் தவறொன்றுமில்லை. ஆனால் அது உங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்குகிறது. நிர்பந்திக்கும் வாழ்க்கை அடிமையின் வாழ்க்கை. நீங்கள் அடிமையாக இருப்பதை விரும்புகிறீர்களா?
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, ஹார்மோன்களின் செயல்பாடு தணிந்த பின்பு, மறுபடியும்காமம் ஒரு விஷயமாகவே இருக்காது என்பதை உணர்கிறீர்கள். அந்த சமயத்தில், கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள்தான் இவற்றையெல்லாம் செய்தீர்களா என்பதை உங்களால் நம்பவே முடியாது.
உடலானது ஒன்றே ஒன்றைத்தான் அறியும். ஒன்று உயிர் வாழ்வது, இரண்டாவது இனப்பெருக்கம் செய்வது. மற்றவை எதையும் அது பெரிதாக பொருட்படுத்தாது. வேறு எதையும் உடலால் அறிந்துகொள்ள முடியாது. உங்கள் உடலின் போக்கில் சென்றால், சிறிய சந்தோஷங்கள் வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கும், பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
உடலில் எந்தத் தவறும் இல்லை, அது ஒரு எல்லைக்குட்பட்டது. எல்லைக்கு உட்பட்டிருப்பது தவறல்ல, ஆனால் அதுவே உச்சநிலை அல்ல. இப்பொழுது எல்லா நேரங்களிலும் எதிர் பாலினரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வுலகில் உள்ள எல்லா பெண்களும் உங்கள் பின்னால் வருவார்கள் என்ற மிகப்பெரிய வரம் ஒன்றை நாளை நான் உங்களுக்குத் தருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் நீங்கள் நிறைவற்ற வாழ்க்கை வாழ்வதைக் காண்பீர்கள்.
கொஞ்சம் இனிமை, ஒரு சிறிய சந்தோஷம், கொஞ்சம் வலி இவற்றை வேண்டுமானால் அது உருவாக்கும். இதிலெல்லாம் எந்தத் தவறும் இல்லை. நான் அவற்றை அசிங்கம் என்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உடலின் எல்லைக்குட்பட்டே வாழ்வீர்கள்.
இதில் எந்தத் தவறும் இல்லை. நான் அசிங்கம் என்றும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உடலின் எல்லைக்குட்பட்டே வாழ்வீர்கள்.
நீங்கள் மலை ஏறுவதாக நினைத்துக் கொள்கிறீர்கள், மலையிலிருந்து கீழிறங்குவதாக நினைத்துக் கொள்கிறீர்கள். உடலுக்கு நீங்கள் நினைப்பது பற்றி எதுவும் தெரியாது. ஒவ்வொரு ஷணமும் அது நேராக கல்லறையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது, வேறு எங்கும் இல்லை.
மாபெரும் கால்பந்தாட்டக்காரர் ‘ஜார்ஜ் பெஸ்ட்’டை உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் மரணமடைந்த அவரைப் பற்றிய ஒரு செய்தித் துணுக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்…
புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரராக அவர், வாழ்க்கையை அதிகமாகவே அனுபவித்தவர். அந்தப் செய்திப்படம், அவர் ஏதாவது ஒரு சினிமா நடிகையையோ, விளம்பர அழகியையோ அல்லது வேறு ஒரு புகழ்பெற்ற அழகியையோ எப்போதும் அனைத்தவாறு இருப்பதாக சித்தரித்தது. சில நேரங்களில் மூவரையும் தாங்கியிருந்தன அவரது கரங்கள்.
ஆனால் 35 வயதினை அவர் கடப்பதற்குள் மிகவும் நொறுக்கிப்போன பரிதாபகரமான மனிதராகிவிட்டார். அவரது 56 அல்லது 57வது வயதில் மிகவும் மனமுடைந்து சலிப்புற்று துயரத்துடன் இறந்துபோனார்.
மரணம் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நீங்கள் எந்தவிதமாக வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அவர் ஒரு மோசமான வாழ்க்கையினை வாழ்ந்தார். உடலின் போக்கில் வாழ்ந்த காரணத்தினால், எல்லாப் பிரச்சனைகளும் அவரை வந்தடைந்தது.
உங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் அதை நீட்டிக்க முயற்சித்தால், நீங்கள் துன்பத்திற்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் உடல் என்பது, உங்கள் வாழ்வில் ஓரளவிற்கு மட்டுமே தன் பங்கினை ஆற்றவேண்டும் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
தங்களைக் குறைவற்றவர்களாகவும், தனக்கு எப்போதுமே எதுவும் நடக்காது என்றும் நினைப்பவர்களுக்கு சிறிது காலத்திற்குப் பின் என்ன நடக்கவிருக்கிறது என்பதை நீங்களே காண்பீர்கள். உங்களை வளைக்கவும், உடைக்கவும், அரைக்கவும், பிணைக்கவும் வாழ்க்கை தனக்கென கோடிக்கணக்கான வழிகளை வைத்துள்ளது.
உடலானது ஒன்றே ஒன்றைத்தான் அறியும். ஒன்று உயிர் வாழ்வது, இரண்டாவது இனப்பெருக்கம் செய்வது.
உங்கள் ஹார்மோன்களில் தவறொன்றுமில்லை. ஆனால் அது உங்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்குகிறது. நிர்பந்திக்கும் வாழ்க்கை என்பது ஒரு அடிமையின் வாழ்க்கை. நீங்கள் ஒரு அடிமையாக இருப்பதை விரும்புகிறீர்களா?
குழந்தையாக இருந்தபோது அடிமைத்தனம் இல்லாமல் இருந்ததால், புன்னகைத்துக் கொண்டு இருந்தீர்கள். பிறகு, எல்லாமே நன்றாக நடந்தாலும், ஏனென்றே தெரியாமல், மெதுவாக விதவிதமான நிர்பந்தங்கள் உங்களை ஆட்கொண்ட பிறகு, உங்கள் முகம் தொங்கிப்போய் வாடிவிட்டது.
வாழ்வில் எல்லாம் வளங்களும் இருந்தாலும் தொங்கிய முகத்துடன்தான் இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்காக நீங்கள் ஏதேதோ செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.
‘உடல்சார்ந்த விஷயங்களே எல்லாம்’ என்ற ஒரு கலாச்சாரம், குறிப்பாக மேலைநாடுகளில் உருவாகிவிட்டது. இதன் காரணமாக, அங்கே சொல்லமுடியாத அளவுக்கு துன்பம் நிலவுகின்றது. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எல்லா வசதிகளும் அவர்கள் பெற்றிருந்தாலும், மனதை சமநிலையில் வைத்திருக்க மருத்துவரை நாடுகிற நிலைதான் உள்ளது.
புத்திசுவாதீனத்தில் வெளி வருவதற்காக, தினமும் ஒரு மாத்திரையை உட்கொள்ள வேண்டிய நிலை மகிழ்ச்சியை தரக்கூடியதல்ல. நிச்சயமாக, உடைந்து போகக்கூடிய விளிம்பில்தான் தினமும் நீங்கள் இருக்கிறீர்கள், ஏனென்றால் வாழ்க்கையின் ஒரு சிறிய அம்சத்தை, நீங்கள் வாழ்க்கையின் முழுமை என்றாக்கிவிட்டதால், வாழ்க்கை தன்போக்கில் அதற்கான பலனை வசூலித்துக்கொள்கிறது, அவ்வளவுதான்.
ஒவ்வொன்றும், அதற்குரிய அளவில் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் பங்குபெற வேண்டும், அதுவே வாழ்வின் முழுமை என்பதாக உருவாக்க முயன்றால், அது வேலை செய்யாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக