தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தங்கத்தால் ஆன தாமரை!


தமிழகத்தில் தெப்பக்குளங்களுடன் கூடிய கோயில்களை தரிசிப்பது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தங்கத்தால் ஆன தாமரையே இருக்கிறது. இதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர வண்டியூர் மாரியம்மன் கோயில் முன்புள்ள தெப்பக்குளமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி. 1635ல் வெட்டப்பட்டதாகும். இது 1000 அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இதை ஒரு நதியாகக் கருதி, ஹரித்ரா நதி என்பர். கும்பகோணம் மகாமகக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணி சங்கமத்தையும் விட உயர்ந்தது. மைலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தெப்பக்குளம், சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளம் ஆகியவையும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பக்குளத்தை கமலாலயம் என்று அழைப்பர். இதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 30 ஏக்கர்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக