தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடு உடையான் தலகலனாக இரந்து உண்ணும்
நாடு உடையான் நள்இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.[1-103-1]
பொருள் : தோடு எனும் அணியை ஒரு காதிலும் குழை என்னும் அணியை மற்றொரு காதிலும் உடையவன் எம்பெருமான் ஈசன். பிரமனின் ஒருதலையைக் கபாலமாக கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்ணும் நாட்டத்தை உடையவன் அப்பெருமான். நடு இரவில் ஆனந்தமாய் நடனத்தை ஆடும் சுடுகாட்டினை உடையவன் அப்பெருமான். அத்தகைய இயல்பினை உடைய எம்பெருமான் வேதகிரீசன் மகிழ்ந்து அமர்ந்து இருக்கும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.
எம்பெருமான் ஈசன் இசைப் பிரியராய் விளங்குவதால் அத்தன்மையில் இரு கந்தர்வ்ர்களைக் குழையாகக் காதில் அணிந்துள்ள மாண்பினை உணர்த்தும் நெறியில் - ”தூயகுழை தாழ” என்று திருஞானசம்பந்தர் அருளிச் செய்துள்ளார்.
தோடு என்று எடுத்து ஓதிய திருப்பதிகண்க்கள் ஆறு. அவையாவனன:
(1) ‘தோடுடைய செவியன்”-திருப்பிரமபுரம்[1
(2) “தோடுடைய காது” - திருநள்ளாறு[1-49-2]
(3) “தோடுடையான் குழை” - திருச்செங்காட்டங்குடி[1-61
(4) “தோடணிகுழை” - ”திருஇடைச்சுரம்” [1-78-6]
(5) “தோடோர் காதினன்” - திருஇடைமருதூர்-[1-95-1]
(6) :தோடுடையான்” -திருக்கழுக்குன்றம் [1-103-1]
சிவாயநம!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக