தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஜூலை, 2013

கான்சர் இருக்கா…? கண்டு பிடிக்க மூன்று நிமிடங்கள் போதும் – கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு

லண்டன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஐநைப் என்ற கருவி, மூன்று வினாடிகளுக்குள் கான்சர் திசுக்களைக் கண்டறிந்து விடுகின்றது. இதன்மூலம், 91 கான்சர் நோயாளிகளின் திசு மாதிரிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. அனைத்து சோதனைகளும் வெற்றி நிலையை அடைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
44cf74c2-60b1-42e8-8754-6da98aef9915_S_secvpfபொதுவாக கேன்சர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கேன்சர் தாக்கிய திசுக்களை மட்டும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. இதனால், அறுவை சிகிச்சை செய்தபோதிலும், அந்த நோயாளிக்கு மீண்டும் கான்சர் நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. மேலும், திசுக்களின் மாதிரிகளை சோதனைச் சாலையில் பரிசோதிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது.
ஆனால், தற்போது லண்டன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஐநைப் என்ற கருவி, மூன்று வினாடிகளுக்குள் கான்சர் திசுக்களைக் கண்டறிந்து விடுகின்றது. இதன்மூலம், 91 கான்சர் நோயாளிகளின் திசு மாதிரிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. இவை அனைத்திலுமே துல்லியமான முடிவுகள் கண்டறியப்பட்டன. லண்டனில் உள்ள இம்ப்பீரியல் கல்லூரியின் இந்த கண்டுபிடிப்பு பற்றிய தகவல் சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
குறைந்த நேரத்தில் முடிவுகளைத் துல்லியமாக அறிவிக்கும் ஐநைப் கருவியினை உபயோகிப்பதன் மூலம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் காலதாமதமின்றி கான்சர் பாதித்த திசுக்களை நீக்கமுடியும். இதனால், மீண்டும் இந்த நோய் தாக்குவதற்கான சாத்தியங்கள் குறைவதோடு, நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கவும் இந்தக் கருவி உதவும் என்று இதன் கண்டுபிடிப்பாளரான டாக்டர் சொல்தான் டக்கட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்கள் முதலில் ஐநைபினைப் பயன்படுத்தி திசுக்களின் பண்புகளை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு நூலகத்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக, 302 அறுவை சிகிச்சை நோயாளிகளிடமிருந்து மூளை, நுரையீரல், மார்பு, வயிறு, குடல் மற்றும் கல்லீரல் போன்ற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட கான்சர் பாதித்த திசுக்கள் மற்றும் சாதாரண திசுக்கள் சோதிக்கப்பட்டு நூலக மாதிரிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தின் மாதிரிகள் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக