தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஜூலை, 2012

' பாயும் புலி பண்டார வன்னியன் '


' பாயும் புலி பண்டார வன்னியன் '

தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டார வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன்.
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் - ஆதிக்கமும் கால் ஊன்ற இடந்தரக்கூடாது என்னும் இலட்சியத்துடன், அவர்களை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று,
அதே கால கட்டத்தில் இலங்கையில் மண்ணின் உரிமைக் காக்கப் போராடியவனே பண்டார வன்னியன்...

பண்டார வன்னி வேந்தன்
படைகண்டால் உடலில் ஆவி
உண்டா போயிற்றா என்றே
ஓடுவார் ஒளிவார் மாற்றார்...
விண்டாலும் சொல்லை மிஞ்சும்
வீரத்தான் தமிழீ ழத்தான்
துண்டாடிப் போட்ட வெள்ளைத்
துரைமார்கள் தலையும் உண்டே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக