கேள்வி ஒன்று பதில் இரண்டு....!
--------------------------
ஆடி மாதம் நல்லது செய்யலாமா?
ஆடி என்பது தக்ஷணாயன துவக்க மாதம். இம்மாதம் தென் திசை கடவுளான எமனுக்கு ஆரம்ப மாதம். அதனால் நற்காரியங்களை இம்மாதத்தில் துவங்கக்கூடாது.
- குமரகுருபர சிவாச்சாரியார்
--------------------------
முன் காலத்தில் ஆடி மாதம் என்பது அறுவடை மாதமாக
இருந்தது. அதனால் அறுவடை பணிகளும் வியாபாரமும் தடைபெறும் என்பதால் ஆடியில் தொழிலை கவனிக்காமல் விஷேடங்களை செய்ய தவிர்த்தார்கள். மேலும் அனேகமாக ஊர்கோவில் திருவிழாக்கல் இம்மாதத்தில் அமையும். அதற்கு காரணம் அதிக காற்று இருந்த காரணத்தால் முன்காலத்தில் பயணம் செய்வதை தவிர்த்து ஊரிலேயே இருப்பார்கள். ஆகவே ஊர்கோவில் விஷேஷத்தை கவனிக்காமல் வீட்டில் விஷேஷம் இருந்தால் யார் கோவில் பணிகளை செய்வது? மற்றபடி ஆடியில் நல்ல விஷயங்களை துவக்கலாம்.
இறைவன் அளித்த 24 மணிநேரமும், 365 நாளும் நல்ல நாட்கள் தான். கடவுள் அளித்த நேரத்தில் இது நல்ல நேரம் இது கெட்ட நேரம் பார்ப்பது நம் ஆணவமே ஆகும். அதனால் இறைவனை ஆழ்ந்து வணங்கி துவங்கும் எச்செயலும் நல்ல நேரத்திலேயே துவக்கப்படுகிறது.
-ஸ்வாமி ஓம்கார்
--------------------------
இது இரண்டில் எது ஆன்மீக கேள்வி-பதில்? உங்களுக்கு எது பிடிச்சுது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக