தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூலை, 2012

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்!!



பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி

அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்

பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

1.தெய்வீகக் குணம்,

2.தூய்மைக் குணம்,

3.மேன்மை,தொண்டு,

4.தன்னடக்கம்,

5.ஆற்றல்,

6.விவேகம்,

7.உண்மை,

8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

9.மேன்மை

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
 





திருமணம் என்பது ஓர் உன்னதமான நாள் ஆகும். இல்வாழ்வில் இணையும் மணமக்களை ஆல் போல் தழைத்து! அருகு போல் வேரூன்றி! மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர்கள் என பெரியோர்கள் வாழ்த்த நடைபெறும் திருமணத்தை ஒரு பொன் நாள் ஆக அமைத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக