தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 13, 2012

"காமத்தை அழித்து மோட்சத்தைத் தரும் லிங்கராஜா சிவனாலயம்"


சிவபெருமானின் கீர்த்திகள்


"காமத்தை அழித்து மோட்சத்தைத் தரும் லிங்கராஜா சிவனாலயம்"


ஓரிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் உள்ளன. பலவற்றின் வரலாறு தெரியவில்லை. ஆனால் அவை கட்டப்பட்ட காலம் மட்டும் தெரிகின்றது. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் லிங்கராஜா எனப்படும் சிவபெருமான் ஆலயம்.

புவனேஸ்வரைப் பற்றி பிரும்ம புராணத்தில் அது கோடி லிங்கங்கள் உள்ள பூமி – ஏகாம்ர ஷேத்திரா - என பெருமைப்படுத்திக் கூறப்பட்டு உள்ளது. பிந்து சாகர் என்ற ஏரியின் அனைத்துப் புறத்திலும் பல ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆகவே அந்த ஏரிக்கு சமீபம் சென்று விட்டால் வித்தல தேவி , ஆனந்த வாசுதேவா, பரசு ராமேஸ்வரா , ராஜா ராணி மற்றும் லிங்க ராஜா ஆலயங்களை தரிசிக்கலாம் .

லிங்கராஜா ஆலய அமைப்பு :

லிங்க ராஜா என்ற ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஏழாம் நூற்றாண்டில் யாயாதி கேசரி என்ற மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் எனத் தெரிகின்றது. அற்புதமான கலைக் களைஞ்சியங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள ஆலயம் அது. ஆலயத்தினுள் உள்ள சிவ லிங்கம் பூமிக்கு மேல் சுமார் எட்டு அங்குல உயரத்திலும் எட்டு அடி சுற்றுப் பகுதியாகவும் ( அகலம் ) உள்ளது ஒரு அற்புதக் காட்சி ஆகும் .

இன்னொரு விஷேசம் என்ன எனில் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை சிவன் எனக் கூறாமல் அது சிவன் மற்றும் விஷ்ணுவை குறிக்கும் ஹரி-ஹரா சிவலிங்கம் என்று கூறுகின்றனர். ஆலயம் மூன்று பிரிவுகளாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது வினாயகர் சன்னதி, அடுத்து காணப்படுவது நந்தி கற்தூண். ஆலயத்தின் உயரம் 180 அடி (சுற்று சுவரின் அகலம் 7 அடி.!) ஒரு நாளைக்கு இருபத்தி இரண்டு முறை பூஜைகள் நடை பெறுகின்றன.!!!

ஆண்டுக்கு ஒரு முறை அந்த லிங்கத்தின் உற்சவ மூர்த்தியை பிந்து சாகர் ஏரியின் நடுவில் உள்ள ஜல மந்திர் என்ற ஆலயத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். ஆலய வளாகத்திற்குள் நூற்றி ஐம்பது சிறு சன்னதிகள் உள்ளன. ஆலயத்தை சுற்றி கோட்டைப் போன்று சிவப்புக் கல்லில் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது.

லிங்கராஜா ஆலயம் எழுந்த கதை

ஆலயம் எழுந்ததிற்கான வரலாற்று கல்வெட்டுக்கள் இல்லை என்றாலும் வாய் மொழி, வாய் மொழியாகக் கூறப்படும் கதை இது. ஒரு முறை தேவலோகத்தில் சிவபெருமானின் உதவியாளர்களாக இருந்த கீர்த்தி மற்றும் வாசா என்ற சிவகணங்கள் பார்வதியின் அழகில் மயங்கி அவளை அடையவிரும்பின. அந்த இரு கணங்களுக்கும் சிவபெருமானிடம் இருந்த பூரணமான பக்தியினால் அழியா ஒரு வரம் பெற்றிருந்தன. அதன்படி அவர்களுக்கு பூமியில் எவராலும் மரணம் ஏற்படாது. ஆனால் காசியைப் போன்ற புனித நதியைப் போன்ற புனித தீர்த்தத்தில் எந்த பதி விரதையாவது அவர்களை நீரில் முழுக அடித்தால் மட்டுமே அவர்கள் மரணம் அடைவார்கள்.

பார்வதியையே சுற்றி சுற்றித் திரிந்த அவர்களை தன்னாலும் ஒன்றும் செய்ய முடியாதே என்பதினால் அவர்களை எப்படி அழிப்பது என சிவபெருமான் யோசனை செய்தார் . அவர் மனதில் ஒரு திட்டம் தயாராயிற்று. அதன்படி அனைவரும் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருக்கையில் வேண்டும் என்றே கீர்த்தி மற்றும் வாசாவும் இருந்த நேரத்தில் பார்வதியிடம் காசியை அடுத்து தனக்கு மிகவும் பிடித்த இடம் ஏகமாதா தீர்த்தமே எனக் கூற, அவர் கூறியதின் அர்தத்தை பார்வதி புரிந்து கொண்டாள்.

உடனே தனக்கு அந்த தீர்தத்தில் சென்று குளிக்க ஆசையாக உள்ளது எனக் கூறினாள். ஆனால் "சிவபெருமானோ" தன்னால் உடனே அங்கு செல்ல முடியாது என்பதினால் வேறு எவருடனாவது செல்லும்படிக் கூறினார் . அவளை யார் அழைத்துச் செல்வது என்ற கேள்வி எழுந்த பொழுது கீர்த்தி மற்றும் வாசா இருவரும் தாம் அவளை அழைத்துச் செல்வதாகக் கூறினர் . ஆகவே பார்வதி அவர்களுடைய தோள்களில் பல்லக்கில் அமருவது போல அமர்ந்து கொள்ள அவளை மிகவும் சந்தோஷமாக தூக்கிக் கொண்டு இருவரும் புவனேசுவரத்தில் இருந்த ஏகமாதா தீர்தத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்றதும் தனக்கு நதியில் தனியே இறங்கிக் குளிக்க பயமாக இருப்பதாக பார்வதி கூற இதுதான் சமயம் , அவளை தண்ணீரிலேயே மடக்கிக் கொள்ளலாம் என நினைத்தபடி அவளை தம்முடைய தோள்களில் ஏற்றி வைத்துக் கொண்டு நீரில் இறங்கினர் . அந்த மகிழ்சியில் அவர்கள் தமக்கு இருந்த சாபத்தை மறந்து விட்டிருந்தனர். நீரில் இறங்கி அவளை தண்ணீரில் முழுகிக் குளிக்க உதவி செய்ய அவளை தோளில் சுமந்தபடி அவர்களும் நீரில் முழுகத் துவங்கினர . நீரில் இறங்கிய அவர்களுடைய பலம் குறைந்தது.

அதுவே தருணம் எனக் காத்திருந்த அவர்களுடைய தோளில் அமர்ந்திருந்த பார்வதி அவர்களை தன் காலினால் நீரில் ஆழ்த்தி மரணம் அடையச் செய்தாள். சிவபெருமானுக்கு பிடித்த தீர்த்தம் , பார்வதி குளித்த தீர்த்தம் என்பதினால் புனிதம் அடைந்த அந்த புனித தீர்த்தத்தில் அவர்கள் மரணம் அடைந்ததினால் மோட்சத்தை அடைந்தனர்.

ஆகவே லிங்க ராஜாவான சிவனை பூஜித கீர்த்தி வாசாக்களுடைய காமத்தை அடக்கி மோட்சம் தந்த ஏரி என்பதினால் அதன் பெயர் லிங்கராஜா ஏரி என ஆயிற்று. அங்கு பார்வதி தன்னுடைய தோஷத்தை விலக்கிக் கொள்ள சிவனை பூஜித்த இடத்தில் எழுந்த ஆலயத்திற்கும் அந்த பெயர் ஏற்பட்டது.

வழி: ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வர் சென்று அங்கிருந்து பஸ், டாக்ஸி மற்றும் ரயிலில் பூரிக்குப் பயணம் செய்தால் அங்குள்ள ஆலயத்தை அடையலாம்.

No comments:

Post a Comment