' அடேய் ஆதித் தமிழா, நீயும் மற்ற இனத்தவரைப் போல் சாதாரமாக வாழ்ந்து விட்டு சென்றிருக்கலாமே, யாரும் செய்திராட வேலைகளை நீ மட்டும் ஏனடா செய்தாய் ? நீ செய்து விட்டு சென்ற,இது போன்ற அசாத்திய வேலைப்பாடுகள் அழிவதை கண்டு, உன் இனத்தாரே மதிக்கவில்லையடா ! மதிக்கவில்லை !! மற்றவர் பார்த்து ரசிக்க,அவர்கள் கண்ணுக்கு அழகாய் தெரிய,இந்த அழகு சிலைகளை வடிக்க ,இதற்கு பின்னால் நீ சிந்திய,வியர்வையும், ரத்தமும் கண்முன்னே அப்பட்டமாய் தெரிகின்றதடா, இருப்பினும், வெறுப்பிலும், வேதனையிலும், உள்ளுக்குள் ஒரு கோழையாய் அழுவதை தவிர, என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லையடா,இவை அனைத்தும் காப்பாற்ற முடியாமல் நிற்கதியாய் நிற்கிறேனடா ! ஒவ்வொரு சிற்பத்திற்கும், ஒவ்வொரு பெயரிட்டாய், ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பெயரிட்டாய், ஆனால் இந்த சிற்பங்களும் , பாறைகளும் தன் இனத்தின் சொத்து என்று தெரிந்தும், ஒவ்வொன்றிற்கும் தமிழனே,ஒவ்வொரு விலை பேசுகிறானடா...உன் இனத்தானே விலை பேசுகிறான்.நீ செய்ததை போல ஒரு செங்கல்லை கூட செய்ய யோக்கியமிள்ளதவன், அதன் மீது எச்சில் துப்புகிறானடா..அயோக்கியன் எச்சில் துப்புகிறான்.. காலம் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையை தவிர, வேறதும் இல்லையடா, என்னிடத்தே வேறேதும் இல்லை ! '
sasitharan!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக