தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஹிட்லரால் காப்பாற்றப்பட்ட யூதர் : வெளியாகியது அரிய தகவல்!!



பொதுவாக ஹிட்லர் என்றாலே, யூதர்களுக்கு எதிரானவர் என்பது எழுதப்படாத விதி. ஹிட்லரின்
நாசிப்படைகள் கோடி கோடியாக யூதர்களை கொன்று குவித்தாலும், ஹிட்லராலும் ஒரு யூதர் காப்பாற்றப்பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜேர்மன் யூதப் பத்திரிகை ஒன்றில் பின்வரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ஏர்னஸ்ட் ஹெஸ் எனும் யூத நீதிபதி, ஹிட்லர் குழுவினருக்காக பணியாற்றினார்.

இதற்கு நன்றிக்கடனாக ஹிட்லரால் எழுதப்பட்ட விசேட கடிதம் ஒன்றினால், நாசிப்படைகளின் கொலைவெறியிலிருந்து குறித்த நீதிபதி காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஹிட்லர் எழுதிய அந்த கடிதத்தைக் கண்டு பிடித்த வரலாற்று அறிஞரான சுசன்னே மவுஸ் என்பவர் இந்த தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளார்.

மேலும் இக் கடிதம் ஹிட்லரின் கையொப்பத்துடன்,  அரச கட்டமைப்பில் இருக்கும் கட்டளைத் தளபதியின் கையெழுத்தும் இடப்பட்டு நாசிப்படைகளுக்கு பிரதி அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 19, 1940 ஆம் ஆண்டு என்ற காலமும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்த நேரத்தில் நாசிகளின் கையில் கிடைத்ததால் அந்த யூத நீதிபதி, ஏர்னஸ்ட் ஹெஸ்,  நாசிகளின் கொடும் கொலை வெறியிலிருந்து காப்பாற்றப் பட்டார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக