தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 ஜூலை, 2012

உணவில் காரம் சேர்த்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் !!


உணவில் சுவை மற்றும் மணம் சேர்க்க பயன்படுத்தப்படும் பொருட்களில் மிளகாய் வத்தலும் ஒன்று. இந்த மிளகாய் வத்தல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க கூடியது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஒயிட்டிஸ் குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடினமான வெப்பத்தை தரக்கூடியது என்பதால், கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.
இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல், அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும், மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக