தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஜூலை, 2012

அருள்மாரி பொழியும் ஸ்ரீநரசிம்மர்!!


அருள்மாரி பொழியும் ஸ்ரீநரசிம்மர், தம் அடியவர் இம்மையில் சிறக்க, வரம்வாரி வழங்குவதிலும் நிகரற்றவர். வேதத்தில் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் என்று பெயர். ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, பரமசிவனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது. இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்;நோய் நொடிகள் நீங்கும் பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் என்பது ஆன்றோர் அறிவுரை.

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம். சிவபெருமானின் அருளியது!

hree Eeshvara Uvaacha
Vritthotphulla visaalaaksham vipak shakshayadeekshitam
Ninaadatrasta vishvaandam Vishnum UGRAM namaamyaham 1

அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான். அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன். தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன். அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.


Sarvaira vadhyataam praaptam sabalaugham ditessutham
Nakhaagraih sakaleechakre yastam VEERAM namaamyaham 2

வரத்தால் வலி மிக்கவன் அசுரனான ஹிரண்ய கசிபு. அவனை நகத்தாலே தகர்த்து எறிந்த வீரனாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன்.




Paadaavashtabddha paataalam moordhaavishta trivishtapam
Bhuja-pravishtaashta-disam MAHAAVISHNUM namaamyaham 3

திருவடி பாதாளத்திலும், திருமுடி அந்திரிஷத்திலும் எண் திக்கிலும் திருக்கரங்கள் பரவி நின்ற மஹா விஷ்ணுவாகிய நரசிம்ஹனை நான் வணங்குகிறேன்.



Jyoteem shyakrendu nakshatra- jvalanaadeenyanukramaat
Jvalanti tejasaa yasya tvam JVALANTAM namaamyaham 4

ஒளியுடைய சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒளியானவன். இவனுடைய ஒளியினால் எல்லாம் ஒளி பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒளிமயமானவன், ஜ்வலிக்கின்றவனை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.



Sarvendriyairapi vinaa sarvam sarvatra sarvadaa
yojaanaati namaamyaadyam tamaham SARVATOMUKHAM 5

எல்லாவற்றையும், எங்கும், எப்போதும் புலன்களின் உதவி இன்றியே நன்கு அறிபவன். முழுமுதலான எங்கும் முகமுடைய சர்வதோமுகனை நான் வணங்குகிறேன்.






Naravath Simha vachaiva yasya roopam mahathmanaha:
Mahashatam MahaDhamshtram Tham NRUSIMHAM Namamyaham 6

நரங்கலந்த சிங்கமதான திருவுருவத்துடன் தோன்றிய மகாத்மாவானவனை, மாபெரும் பிடரியுடனும், பற்களுடனும் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ஹனை வணங்குகிறேன்.


Yannaama-smaranad bheetaa bhootha bhetaala raakshasaah
Rogaadyaascha pranaschhanti BHEESHANAM tam namaamyaham 7

எல்லாவற்றையும், எங்கும், எப்போதும் புலன்களின் உதவி இன்றியே நன்கு அறிபவன். முழுமுதலான எங்கும் முகமுடைய சர்வதோமுகனை நான் வணங்குகிறேன்.




Sarvopi yam samaasritya sakalam bhadramasnute
Sriyaa cha bhadrayaa jushto yastam BHADRAM namaamyaham 8


எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன்.




Saakshaat svakaale sampraaptam Mrityum satrugananvitham,
Bhaktaanaam naasayed yastu MRITYU MRITYUM NAMAAMYAHAM 9


காலத்தில் வந்து பக்தர்களின் சத்த்ருகளுக்கு மிருத்யு ஆனவனான, மிருத்யுவிற்கும் மிருத்யுவான (மிருத்யுமிருத்யும்) வனை நான் வணங்குகிறேன்.



Namaskaaraatmakam yasmai vidhaaya atma nivedanam
Tyaktaduhkho’khilaan kaamaan asnute tam namaamyaham 10

அவன் திருவடிகளில் நம: என்று கூறி ஆத்ம நிவேதனம் சரணாகதி செய்து விட்டால் அவன் யாராயினும் காத்திடுவான். துயர் கெடும். இன்னல்கள் இடிபட்டோடும். இத்தகைய நலன்களை அருளும் எம்பெருமானை நான் வணங்குகிறேன்.






Daasabhootassvatah sarve hyaatmaanah paramaatmanah
Atoham api te daasah iti matvaa namaamyaham 11

எல்லோரும் அவனது தாஸர்களே. இயற்கையிலே தாஸர்கள். நானும் அவனுக்கு தாஸன் தான் என்பதை நன்கு உணர்ந்த நான் அவனை வணங்குகிறேன்.




Sankarenaadaraat proktam padaanaam tatva Nirnayam
Trisandhyam yah pathet tasya shree vidya ayyshya vardhate 12

இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் பரமசிவனார்.






  • Kambathasan Dasan மெய்யாகவே சொல்கிறேன்.. இந்த மந்திரங்களை சற்று முன்பு இங்கு பதிவு செய்யும் போது.. என் மனதில் ஒரு திகில் உண்டாகியது.. லேசாக படபடப்பு வந்தது. தூண் வெடித்து, அண்டம அலற பயங்கர ரூபத்துடன் அவதரித்து பக்தனை காத்த பகவான் நம் எல்லோரையும் காக்கட்டும்!
    13 hours ago ·  · 5

  • Manoharan Jayaraman சிவன் இவ்வாறு கூறியிருக்கும் போது "சரபேஸ்வரராய் வந்து நருசிம்ஹரை சம்ஹரித்ததாகக் கூறப்படும் கதை விளக்கம் என்ன?


  • Kambathasan Dasan 
    சரபேஸ்வரர் நரசிம்மரை சம்கரிக்கும் காரணம் இல்லையே... சிவபெருமான் நரசிம்மரை சாந்த படுத்த எடுத்த அவதாரம் அது என்று படித்துள்ளேன். தனது இரண்டு இறக்கைகளிலும் நரசிம்மரை கட்டியனைத்து அவரை அமைதி படுத்தியதாக அறிந்துள்ளேன். அனால்.. சாத்விக புராணங்கலான விஷ்ணு புராணத்திலும் , பாகவத புராணத்திலும் சரபேஸ்வரர் கதை இல்லை. தேவர்கள் எல்லாம் முயற்சித்து, முடியாமல், இறுதியில் எவரை காக்க இந்த பயங்கர ரூபத்தை எடுத்தாரோ, அந்த பக்த பிரகலாதனே துதிக்க நரசிம்மர் கோபம் தணிந்து சுயரூபம் அடைந்தார் என்பது கதை.

  • Kambathasan Dasan 
    பதினெட்டு ஆயிரங்கள் கொண்ட முழு பாகவத மஹா புராணம் என்னிடம் உள்ளது.அனைத்தும் மூல சம்ஸ்கிருத ஸ்லோகங்களை கொண்டவை. இணையத்திலும் அதை பதிவு செய்து உள்ளார்கள். இதில், இரண்யகசிபு கதையும், அவனை அழிக்க பகவான் எடுத்த அவதாரமும், பக்த பிரகலாதன் கதையும் அனைத்தும் உண்டு. இங்கு நான் பிரகலாதன் நரசிம்மரை சாந்த படுத்த சொன்ன தோத்திரங்கள் உள்ள பகுதியை மட்டும் அளித்துள்ளேன். படித்து பாருங்கள். பகவானின் மற்ற அவதாரங்கள், மாபெரும் பக்தர்கள், மன்னர்கள், கல்பம் ,யுகம், இன்னும் நிறைய செய்திகள் இங்கே உண்டு.. படிக்க வேண்டுகிறேன்..

  • Devi Shirapthi Pushkarni எல்லோரும் எவனை அடி பணிந்து எல்லா விதமான மங்களங்களையும் அடைகின்றனரோ, மங்கலமானவளான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் சேர்ந்துறையும் மங்களமானவனை நான் நமஸ்கரிக்கின்றேன்.

  • Shree Garudaazhvaan பிரமாதம்..உக்கிர நரசிம்மன்..ஹிரண்ய வதம்...

  • Kambathasan Dasan ஆனால்.. நரசிம்மரை இந்த ரூபத்தில் வழிப்படுவதை விட... தாயாரை மடியில் வைத்து பிரகலாதனுக்கு அபயம் அளித்து சாந்த சொரூபியாக இருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மரை வழிபடுவது இன்னும் சிறப்பு என்று பெரியோர்கள் சொல்லி கேட்டுள்ளேன்.

  • Kambathasan Dasanhttp://www.youtube.com/watch?v=PfoMZnehp2Y
    www.youtube.com
    This video is dedicated at the lotus feet of Lord Narasimha. Vritthotphulla visaalaaksham vipakshakshayadeeksheetam Ninaadatrasta vishvaandam Vishnu ugram na...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக