தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜூலை, 2012

பாகு என்ற பெயருடைய மீன் !!



அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்திலுள்ள லோ யேகெர் என்ற ஏரியில் ஆண்களின் பிறப்புறுப்புக்களை கடித்துத் அவர்களைக் கொல்லும் ஆபத்தான மீன் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மீன் லோ யேகெர் ஏரியில் பிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏரியில் இறங்கிக் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகு என்ற பெயருடைய இம்மீனின் பற்கள் மனிதர்களின் பற்களை போன்று உள்ளன.

இதற்குமுன்பு, தென் அமெரிக்காவின் நன்னீர் ஏரிகளில் காணப்படும் பிரானா எனப்படும் மீன்கள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்பட்டன.

ஆனாலும் இவற்றை சிலர் அலங்கார மீன்களாக வீட்டில் வளர்ப்பார்கள். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகு மீனானது மிகக் கொடூரமான மீன்களாகக் கருதப்படுகின்றது.

இதற்கு முன்பு, பப்புவா நியூகினியாவில் இரு மீனவர்களது பிறப்புறுப்புக்களை கடித்துத் துண்டாக்கி அவர்கள் மரணமடைவதற்கு இந்த த போல் கட்டர் என்ற இந்த பாகு மீன் காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக