தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஜூலை, 2012

பார்க்கும் பார்வைக்கு ஏற்றவாறு மாறும் மகாபாரதம்!


சிறிதளவு மகாபாரத பரிட்சயம் உள்ள எவருக்கும் தெரியும் இது ஆறாம் நாள் போர் காட்சி என்று.பீஷ்மரை கொல்லும் நோக்கில் கிருஷ்ணன் புயல் என செல்லும் காட்சி.என்னை மிகவும் கவர்ந்த படம்.இந்த படத்தை முன்வைத்து இதன் பின்னணி குறித்து சில வார்த்தைகள்.
ஐந்தாம் நாள் இரவு துரியோதனன் மிக கோபமாகவும்,கிண்டலாகவும் பேசும் வார்த்தைகளை கேட்டு ஆத்திரம் அடையும் பீஷ்மர் நாளை மாலைக்குள் அர்ஜுனனை கொல்வேன் அல்லது ஆயுதம் ஏந்தி போர் புரிய மாட்டேன் என உறுதி மொழி பூண்டு இருக்கும் கிருஷ்ணனை ஆயுதம் ஏந்த வைப்பேன் என சத்தியம் செய்கிறார்.
ஆறாம் நாள் போர் துவங்குகிறது.பீஷ்மரின் உக்கிரத்தை தாங்க முடியாமல் பாண்டவர் படை சிதறுகிறது.சொல்லில் அடங்கா இழப்புகள்.மாவீரர் என்று சொல்லிக்கொண்டவர் எல்லாம் புறமுதுகிட்டு ஓடிக்கொண்டு உள்ளனர்.அர்ஜுனனின் வில் முறிக்கப்பட்டு,படுகாயத்துக்கு ஆளாகிறான்.அந்த நிலையிலும் அர்ஜுனன் தனது பாட்டனான பீஷ்மரை எதிர்த்து முழுவீச்சில் போர் புரியவில்லை.ஆத்திரம் தலைக்கேறும் கிருஷ்ணன் தேரை விட்டு இறங்கி அருகில் கிடக்கும் உடைந்த தேரின் சக்கரம் ஒன்றை தூக்கிக் கொண்டு பீஷ்மரை நோக்கி பாய்கிறார்.ஆயுதம் ஏந்தி போர் புரிய மாட்டேன் என்ற சத்தியத்தை கிருஷ்ணன் தனக்காக மீறுகிறாரே என்ற பதைபதைப்பில் அர்ஜுனன் அவர் காலை பிடித்து கதறுகிறான்.எனினும் கிருஷ்ணன் அர்ஜுனனை பத்தடி தூரம் தரையோடு இழுத்து சென்று பீஷ்மரை நோக்கி விரைகிறார்.கிருஷ்ணன் கையால் கொல்லப்படும் பாக்கியத்தை எதிர்நோக்கி இரு கரங்களையும் விரித்து வரவேற்கிறார் பீஷ்மர். இவ்வளவு தான் மகாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

வரிக்கு வரி படித்தால் இவ்வளவு தான் புரியும்.சொல்லவந்த கதை எப்பொழுதும் வரிகளுக்கு இடையில் தான் இருக்கும்.அதை கண்டறிய நாம் தான் சிந்திக்க வேண்டும்.
கிருஷ்ணரின் ஆயுதம் சுதர்சன சக்கரம்,ஆனால் இங்கு தேர் சக்கரத்தை ஏந்தி போர் புரிய எத்தனிக்கிறார்.காரணம் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று தன்னளவில் எடுத்த உறுதி மொழி.பிறிதொரு நாளில் இதே பீஷ்மரை நோக்கி இன்னும் கோபமாக குதிரைகளை முடுக்கும் சாட்டையுடன் பாய்வார் கிருஷ்ணன்.
மகாபாரதத்தில் கடவுளாக சித்தரிக்கப்படும் கிருஷ்ணன் தனது நண்பன் அர்ஜுனனுக்கு பிரச்சனை என்றவுடன் சத்தியம் தவறினாலும் பரவா இல்லை என்று போர் புரிய எத்தனிக்கிறார் அல்லது பீஷ்மர் அர்ஜுனனை கொள்ள முடியாது,அவரைப் போன்ற மாவீரர்களின் வாக்கு தவறக் கூடாது என கருதி அவரது சபதம் நிறைவேறும் விதமாக தமது சத்தியம் தவறினாலும் பரவா இல்லை என்று ஆயுதம் பூணுகிறார்.
மகாபாரதத்தின் மிகப் பெரும் சூட்ச்சுமம் என்னை பொறுத்த வரை அது பூடகமாக சொல்லி இருக்கும் ஒரு உண்மை.கிட்டத்தட்ட ஜென் கதைகளுக்கு நிகரானது அது,
மஹபாரத காலகட்டத்தில் இருந்த அத்தனை வீரர்களிலும் மிகச் சிறந்தவர் நால்வர்.
அர்ஜுனன் மற்றும் கர்ணனை விட பல மடங்கு சிறந்த வில் வீரர் விதுரன்.விஷ்ணு தனுசு அவரிடம் இருந்தது.
சத்ரியர்களின் சிம்ம சொப்பனம் பரசுராமர்.
கிருஷ்ணன்.
பல ராமன்.
வெவ்வேறு காரணங்களுக்காக இந்த நால்வரும் போரில் கலந்து கொள்ளவில்லை.இவர்களில் யாரேனும் ஒருவர் போரில் கலந்து கொண்டு இருந்தாலும் ஒரே நாளில் போர் முடிவுக்கு வந்து இருக்கும்.செயலின் உச்சம் செயலின்மை.சப்தத்தின் உச்சம் மௌனம்,வீரத்தின் உச்சம் போரிடாமல் இருப்பது என்ற உண்மையை உணர்த்தும் விதமாகவே சூழல் சரியாக அமைந்தும் இவர்கள் போரிடவில்லை என்பது தான் அது.



இணுவில் ஸ்ரீ கிருஷ்ணன் சக்கரம் தூக்கியது உண்மை,அது எதற்காக என்று பீஷ்மர் தனது தேரோட்டிக்கு விளக்கியுள்ளார்,யுத்தத்தில் அசட்டையாக இருந்த அர்ச்சுனனை யுத்தத்தில் இருத்த அவர் செய்த தந்திரமே அதுவாம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக