தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 ஜூலை, 2012

குமரிக்கண்ட மக்களது நாகரீகம் {பாகம்1,2 }


குமரிக்கண்ட மக்களது நாகரீகம் {பாகம் 1 }

குமரிக்கண்ட மக்கள் தற்கால மக்களைவிடப் பெரிதும் நெட்டையானவர்களே ஆறடிக்கும் மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர் .
அவர்களின் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது.அவர்களுடைய கைகள் மனிதர்களின் கைகளைவிட நீண்டவையாகவும் ,பெரியவையாகவும் ,சதைப்பற்று மிக்கவையாகவும் இருந்தன .கால்கள் இதற்கொத்து நிட்சிபெறாமல் திரட்சியுடையவையாய்
இருந்தன .தலை உச்சியில் முடி இயற்கையாகவே கட்டையாக இருந்தது .ஆனால்,பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப் பெற்றிருந்தது .முடிகள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை .கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும் ,தொழில் தீட்டப்பெற்ற ஓவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும் ,தலைமுடியைப் பின்னி முடிப்பதையே பேரனியாகக் கொண்டனர் என்றும் ,அவ்வோர் அணியிலேதானே அவர்கள் தம் பலவகைப் பட்ட திறன்களையும் திருத்தக் காட்டினர் என்றும் அறிகிறோம்.அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள் .சிறுமணிகளாகிய மாலை ஒன்றினை கழுத்தனியாகக் கொண்டார்கள் .காலடிகளும் ,கைகளும் , அங்கைகளும் {உள்ளங்கை} மிகப் பரந்திருந்ததோடு விரல்களின் எல்லாக் கனுக்களும் {ஒரு பிரிவாக } தடையின்றி அசையக்கூடியவையாய் இருந்தப்படியால் அவர்கள் தற்காலமனிதர்களைவிட மிக நுண்ணிய வேலை திறனுடையவராய் இருந்தனர் .

தொடரும் ..........







குமரிக்கண்ட மக்களது நாகரீகம் {பாகம் 2 }


பெண்கள் ஆடவரைவிட உயரத்தில் சற்று குறைந்தும் பருமனில் சற்றுக் கூடியும் இருந்தனர் .ஆடவரைவிட அவர்கள் உருவம் வனப்புடையதாய் இருந்தது என்பது எதிர்பார்க்கத்தக்கதே .ஆடவர் முகம் பெண்டிர் முகம் போன்றே முடி அற்றதாய் இருந்தது .ஆனால்,பெண்கள் ஒருவகை நாரினால் செய்த முகமூடி அணிந்திருந்தனர் .இதன் மூலம் வெயிலின் சூடு அவர்கள் முகத்தை வாட்டாமலும் ,காற்று மற்றும் எளிதில் புகும் படியும் இருந்ததனால் ஆடவர்களைவிட அவர்கள் முகங்கள் பொன்னிற மிக்கவையாய் இருந்தது .அவர்கள் காதுகள் இன்றைய மக்களின் காதுகளை விடச் சிறியவையாய் இருந்தன .மூக்கு மிகவும் சப்பையாகவும் பெரியதாகவும் இருந்தது ,கண்கள் பெரியவை தெளிவையும் அறிவையும் காட்டுபவை .பொதுப்பட அவர்கள் செம்பு அல்லது பொன்னிற முடையவர்கள் .கண்கள் தவிட்டு நிறமும் முடி கருமை நிறமும் உடையன .பற்கள் சிறியவையாய் முத்துப்போல் ஒரே படியிணவாய் வெண்மையாக விளங்கின .அவர்களது உடலமைப்பில் மிகவும் குறிப்பிடத்தகுந்த பகுதி நெற்றியே ஆகும் . குமரிக்கண்டத்தினருக்கு ஆறு அல்லது ஏழு அங்குலம் வரை அகன்று உயர்ந்திருந்தது .அதில் மூக்கடியினின்றும் ஓர் அங்குலம் அல்லது ஒன்றை அங்குல உயரத்தில் வாதுமைப் பருப்பளவில் ஒரு புடைப்பு இருந்தது .இஃது அவர்களுக்கு முகவும் மென்மையும் நுட்ப ஆற்றலும் பொருந்திய ஒரு புலனாய் அமைந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக