சைவ சமயத்தில் முதல் குருவாகவும்
சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி.
www.fb.com/thirumarai
ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.
வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிவேல் வைப்போம்.
என்னும் திருவிளையாடற் புராணம்
இறை அடியில் - இறைவன் திருவடிகளில்,
வந்து தாழும் - வந்து வணங்குகின்ற,
வானவர் - தேவர்களின்,
மகுடகோடி பந்தியின் - முடியுறுப்பு வரிசைகளினின்று,
மணிகள் சிந்த - மாணிக்கங்கள் சிதறும்படியாக,
வேத்திரப்படையால் - பிரம்பாகிய படையால்,
தாக்கி - அடித்து,
அந்தியும் பகலும் - இரவும் பகலும்,
தொண்டர் - திருத்தொண்டர்கள்,
அலகு இடும் - திருவலகிடுதற்குக் காரணமாயுள்ள,
குப்பை ஆக்கும் - குப்பையாகச் செய்கின்ற,
நந்தி எம் பெருமான் - எம் திருநந்தி தேவரின்,
பாதம் - திருவடிகளாகிய,
நகை மலர் - ஒளிபொருந்திய மலர்களை,
முடிமேல் வைப்பாம் - முடியின் கண்ணே சூடுவாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக