தினசரி உணவு உண்ணும் போது 40 சதவிகிதம் குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டு காலம் ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்று ஆரோக்கியம், முதுமை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனிதவாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாது. வயதாக வயதாக நோய் ஏற்படும். மரபணுக்களின் காரணமாகவும் நோய்களும் ஏற்படுகின்றன. இதய நோய், புற்றுநோய், நரம்பியல் நோய்களும் மூப்பின் காரணமாக ஏற்பட்டு மரணங்களும் சம்பவிக்கின்றன.
சரியான உணவுப்பழக்கத்தின் மூலம் 30 சதவிகிதம் வயதாவதையும், நோய் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி வயிறுமுட்ட உண்டு உடலில் கொழுப்பை அதிகரித்துக் கொள்வதை விட 40 சதவிகிதம் குறைவாக உணவு உண்டு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறைவான அளவில் உணவு உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு வயதான பின்னர் வரும் அல்சீமர் நோய், இதயநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறைவாகவே ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக