தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜனவரி, 2017

உங்களிடம் இந்த பழக்கங்கள் உள்ளதா? அப்போ செல்வமே தேடி வரும்

ஒருவரிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் மிகவும் நல்லவர் என்பதற்கான அடையாளமாக அவர்களின் புகழை இந்த சமூகத்தில் நிலைப்படுத்துகிறது.
எனவே நமது வாழ்வில் புகழ், வெற்றி செல்வதை அடைவதற்கு, நமக்கு எந்த மாதிரியான நல்ல பழக்கவழக்கங்கள் இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
அன்றாடம் நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் என்ன?
  • நாம் தினமும் நமது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பழக்கவழக்கமாகும். இந்த பழக்கத்தை நாம் என்றும் தொடர்ந்தால், நமக்கு நல்லதே நடக்கும்.
  • நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் போன்றவற்றில் பெண் என்பவள் ஆதிசக்தி என்று கூறப்பட்டுள்ளது. எனவே தாய் மற்றும் தாரங்களை நாம் மதிக்க வேண்டும்.
  • நமது வாழ்வில் நம்மால் முடிந்த வரை இயலாதவர்களுக்கு, பணமாக அல்லது உணவாக கூட உதவி செய்ய வேண்டும். மேலும் பார்வை இழந்தவர்களை சாலை கடக்க வைப்பது இது போன்ற சிறிய உதவியை கூட செய்ய தவறக் கூடாது.
  • நமது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான பசு, பறவை, நாய் இது போன்ர விலங்குகளுக்கு கூட நம்மால் முடிந்த அளவு தினமும் உணவளிப்பது மிகவும் நல்ல பழக்கமாகும்.
  • நாம் தினமும் காலை எழுந்தவுடன் நம்முடைய இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உள்ளங்கையில் முகம் படுமாறு மூன்று முறைகள் செய்ய வேண்டும்.
  • தினமும் காலையில் எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு, சூரிய பகவானை மறக்காமல் வணங்கி விட்டு, தேன் சுவைத்தப் பின் குளிக்க செல்ல வேண்டும்.
  • செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி, அதை நமது வீட்டிற்கு வெளியில் ஒரு ஒதுக்குப் புறத்தில் வைக்க வேண்டும்.
  • ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து, மற்ற நாட்களில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதை மறக்கக் கூடாது. மேலும் உணவு சாப்பிடும் போது, அமர்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
  • நம்முடைய வலது கையில் எப்போதும் கருப்பு கயிரை கட்டக் கொள்ள வேண்டும். இரவு தூங்கும் முன் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடிக்க வேண்டும்.
  • நமது வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமது வீட்டின் ஏதேனும் ஒரு இடத்தில் ரூ. 21 -ஐ முடித்து வைக்க வேண்டும். ஏனெனில் நாம் வெளியில் செல்லும் போது, முடியாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
  • ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து, மற்ற நாட்களில் தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியேறும் போது, துளசி இலையை மறக்காமல் சாப்பிட்டுச் செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக