தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஆகஸ்ட், 2017

கர்ப்பகாலத்தில் பெண்கள் புகைப்பதனால் ஏற்படும் மற்றுமொரு எதிர்விளைவு கண்டுபிடிப்பு!

பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது சிகரெட் போன்றவற்றினை புகைக்கக்கூடாது என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயம் ஆகும்.
இருந்தும் சிகரெட்டில் உள்ள நிகோட்டின் எனும் வேதிப்பொருள் பிறக்கவிருக்கும் குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு ஆபத்து இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது தாயின் இரத்தத்தில் அநாவசியமான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வேண்டத்தகாத மூலக்கூறுகள் உடல் முழுவதும் பரவுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாங்காங் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள Kolling Institute, Chulalongkorn பல்கலைக்கழகம் மற்றும் Technology Sydney பல்கலைக்கழகம் என்பன இணைந்து இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளன.
நபர் ஒருவர் புகைக்கும்போது மேலதிகமான நச்சு வேதிப்பொருட்கள் மற்றும் பில்லியன் கணக்கான ஆக்ஸிஜனேற்றங்கள் என்பன உட்சுவாச வளியில் கலக்கின்றது.
இவை இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவுகின்றமை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/science/03/130970

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக