தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

கற்பழிப்பு குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கும் 10 நாடுகள்

சர்வதேச நாடுகளில் பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் கூட குற்றங்களை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்துதல், தீவிரவாதத்தில் ஈடுப்படுதல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு பல நாடுகள் மரண தண்டனையும், ஆயுள் தண்டனையையும் வழங்கி வருகிறது.
இந்த வரிசையில் கற்பழிப்பு குற்றத்திற்கு பெரும்பாலான நாடுகள் கடுமையான தண்டனையை மட்டுமே வழங்கி வருகிறது.
இந்த நாடுகள் குறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்னர் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணிற்கும் எதற்காக திருமணம் செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாகரீகம் வளர்ச்சி அடையாத காலத்தில் தற்போதுள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் எவையும் இல்லை.
ஒரு ஆண் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம். அதேபோல், ஒரு பெண் பல ஆண்களுடன் உடலுறவு கொள்ளலாம். இதற்கு எவ்வித தடையும் இல்லை.
ஆனால், இந்த சுதந்திரம் காரணமாக குழந்தைகளின் பிறப்பு சதவிகிதம் வேகமாக அதிகரித்தது.
முக்கியமாக, ஒரு பெண் பல ஆண்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதால் அவளுக்கு பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்பது தெரியாமல் போய்விடுகிறது.
இந்த சிக்கலை தவிர்ப்பதற்காக தான் திருமணம் என்ற வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும். ஒரு பெண் ஒரு ஆணிடம் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பலர் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
அதாவது, இவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள். இவர்களுடன் பிறர் உடலுறவில் ஈடுப்படக் கூடாது என்பதை பிறருக்கு தெரியும் வகையில் உணர்த்தவே திருமணம் என்ற சம்பர்தாயம் நடைமுறைக்கு வந்தது.
இந்த திருமண நடைமுறை சரியானதாக இருப்பதால் இதனை உலகமே ஏற்றுக்கொண்டது.
எனினும், நாகரீகம் வளர்ச்சி அடைந்தபோது இந்த சம்பர்தாயத்தை மீறி ஆண்கள் திருமணம் செய்யப்பட்ட மற்றும் திருமணம் ஆகாத பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது மிரட்டி கற்பழிக்கும் செயல்கள் வேர் விட்டு முளைத்துள்ளன.
இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களை தடுக்கவே பல்வேறு நாடுகள் பல தண்டனைகளை அறிமுகம் செய்தன.
இந்த வரிசையில், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா மட்டுமே கற்பழிப்பு குற்றத்திற்கு கடுமையான, கொடூரமான தண்டனையை வழங்கி வருகிறது.
கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் முதல் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.
சவுதி அரேபியா
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கற்பழிப்பு குற்றத்திற்கு மிகவும் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது.
கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர் விரைவாகவும், எளிதாகவும் இறந்து விடக் கூடாது என்பதற்காக அவர் மீது கற்கள் வீசப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்.
பின்னர், வலியால் துடிக்கும் அவர் மீது கற்கள் போடப்பட்டு நிரப்பப்படுவதால் அவரது உயிர் எளிதில் பிரிந்து விடாமல் சித்ரவதை அனுபவித்து இறுதியில் உயிரை விடுகிறார்.
சில நேரங்களில், கற்பழிப்பு குற்றவாளியை பொது இடத்தில் நிறுத்தி அவரது தலையை துண்டாக வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஈரான்
ஈரான் நாட்டில் குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்பது அந்நாட்டின் முக்கிய சட்டமாகும்.
ஒருவர் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கவும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கிறது.
உதாரணத்திற்கு, கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்குகிறது.
அதே சமயம், பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால் குற்றவாளியிடம் இருந்து போதுமான பணத்தை இழப்பீடாக பெற்றுக்கொள்ளலாம். எனினும், குற்றவாளி இழப்பீடு கொடுத்தாலும் கூட அவருக்கு ஆயுள் தண்டனையுடன் 100 சவுக்கடிகளும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எகிப்து
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்தில் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்து பின்பற்றப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பெண்ணை 10 ஆண்கள் கூட்டாக கற்பழித்ததை தொடர்ந்து அந்த 10 நபர்களுக்கும் அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமீரகம்
ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு குற்றங்களுக்கு பல கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கற்பழிப்பு குற்றத்திற்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
துபாயில் ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினால் அவருக்கு நிச்சயமாக மரண தண்டனை மட்டுமே வழங்கப்படும். கற்பழிப்பு குற்றம் கடுமையானது என்பதால் எவ்வித கருணையும் காட்டாமல் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
சவுதி அரேபியா போல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய நாடு என்பதால் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இஸ்லாமிய சட்டப்படி, ஒரு பெண்ணை ஒரு ஆண் கற்பழித்தால், அவர் அடுத்த 4 நாட்களுக்குள் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவார்.
சீனா
கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை தீர்ப்பாக விதிக்கபடுகிறது. சில வழக்குகளில் கற்பழித்த நபரின் ஆண்மையும் நீக்கப்படுகிறது. கற்பழிப்பு குற்றத்திற்கு விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசு அவசரமாக தீர்ப்பை வழங்கி வருகிறது.
உதாரணத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ஆண்களுக்கு அவசரமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், துரதிஷ்டவசமாக தண்டனை நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நால்வரும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது.
இஸ்ரேல்
யூதர்களின் நாடான இஸ்ரேலில் கற்பழிப்பு குற்றத்திற்கு குறைந்த பட்சம் 4 ஆண்டுகளும், அதிகபட்சம் 16 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
அதே சமயம், யூத சட்டப்படி கற்பழிக்கப்பட்ட பெண்ணை அந்த ஆண் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதனை ஆண் விரும்பவில்லை என்றால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரஷ்யா
ரஷ்யாவில் கற்பழிப்பு குற்றத்திற்கு குறைந்தது 3 முதல் 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு கீழ் இருந்தால், கற்பழித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
அதே சமயம், கற்பழிப்பிற்கு பின்னர் பெண் உயிரிழக்க நேரிட்டால் ஆணிற்கு 15 ஆண்டுகளும், கற்பழிக்கப்பட்டவர் 15 கீழ் இருந்து உயிரிழந்தால் ஆணிற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
நெதர்லாந்து
நெதர்லாந்து நாட்டில் பலாத்காரம், கற்பழிப்பு மட்டுமின்றி ஒரு பெண்ணை அவரது விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுத்தாலும் அது கற்பழிப்பு வழக்காகவே பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்தில் கற்பழிப்பு குற்றத்திற்கு அதிகப்பட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. மேலும், பல நாடுகளில் பாலியல் தொழிலாளிகள் விருப்பம் இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டால் பெரிய குற்றமாக பார்க்கப்படுவதில்லை.
ஆனால், நெதர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளியின் விருப்பம் இல்லாமல் அவரை சீண்டினால் கூட அந்த ஆணிற்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் கற்பழிப்பு குற்றத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
அதே சமயம், பாதிக்கப்பட்டவர் 15 வயதிற்கு கீழ் இருந்தால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகளும், கற்பழிப்பிற்கு பின்னர் பெண் உயிரிழந்தால் 30 ஆண்டுகளும், உடல் உறுப்புகளை சித்ரவதை செய்து கற்பழித்தால், நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
http://news.lankasri.com/othercountries/03/130054?ref=rightsidebar-manithan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக