அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் தொடர்ந்து குடித்து வந்தால், பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.
நன்மைகள்
- வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம்.
- நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
- உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றப்படும்.
- உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
- உடல் பருமன் உள்ளவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறையும்.
- தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள், புண்கள், சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
- தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
- இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
http://news.lankasri.com/health/03/131005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக