தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

உலகில் நிம்மதியாக வாழத்தகுந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு

உலக அளவில் அச்சமின்றி வாழத்தகுந்த நகரங்களை லண்டனைச் சேர்ந்த Economist Intelligence Unit(EIU) என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது.
இதில், மொத்தம் 140 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக Economist Intelligence Unit(EIU) அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.
வாழ்த்தகுந்த சிறந்த முதல் 10 நகரங்களின் பட்டியல்
  1. Melbourne
  2. Austrian capital, Vienna
  3. Canada's Vancouver
  4. Toronto
  5. Calgary
  6. Adelaide
  7. Perth
  8. Auckland
  9. Helsinki
  10. Hamburg
மக்கள் நிம்மதியாக வாழ முடியாத 10 நகரங்கள்
  1. Kiev
  2. Douala
  3. Harare
  4. Karachi
  5. Algiers
  6. Port Moresby
  7. Dhaka
  8. Tripoli
  9. Lagos
  10. Damascus
இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் அச்சமின்றி வாழ ஏதுவான நகரங்களாக மக்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக மக்கள் அங்கு நிம்மதியாக வாழவே முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Economist Intelligence Unit(EIU) கணக்கெடுப்பின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் சராசரியான வாழ்வாதார மதிப்பானது 0.8 சதவிகிதம் குறைந்துள்ளது என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/othercountries/03/130830

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக