தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

காலின் அடிப்பகுதி எதற்காக தட்டையாக இருக்கிறது?

மனிதர்களுடைய பாதத்தில் குதிப்பகுதி (heel) அடையாளத்திற்கும், விரல்பகுதிப் பாத அடையாளத்திற்கும் இடையில் வெற்றிடமாய் அமைந்து இருப்பதைக் காணலாம்.
காலின் பாத நடுப்பகுதி தரைக்கு மேல் உயர்ந்து இரண்டு தசைத் தொகுதிகளில் குருத்தெலும்புத்தசை சேர்கிறது, இதற்கு பெரோ னல் தசை (Peronal) எனப் பெயர், இது வளைந்து அடிப்பாதம் அமைகிறது.
ஆனால், ஒரு சிலருக்கு பாதம் பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். இந்த முன்பின் தசைத் தொகுதிகள் வலுக் குறைந்தால் பாதம் அகன்று, தசைகள் மூழ்கடிக்கப்பட்டு தட்டையாகிறது.
அதனால் பாதத்தின் தாரைகள் தட்டையாகக் காணப்படுகின்றன, இடையில் இடைவெளி ஏற்படுவதில்லை, இதைத்தான் தட்டைக்கால் அல்லது வீழ்ந்த வளைவுகள் என அழைக்கின்றனர்.
பலமணி நேரம் நின்றுகொண்டு வேலை பார்த்தால் கால்பாதம் இதுபோன்று தட்டையாக இருக்கும், காவல் துறையில் பணியாற்றுவோர், மேசைப்பணிப் பெண்கள், செவிலியர் அடிக்கடி தட்டைக்காலால் துன்புறுவர்.
தசைகளை மறுபடியும் இறுக்கம் செய்வதற்கான பயிற்சி செய்வது இந்நோய் நீக்க வழியாகும்.
http://news.lankasri.com/disease/03/130841

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக