தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

டைனோசரின் பரிணாம வளர்ச்சியில் தவறவிடப்பட்ட டைனோசர் இதுதான்

டைனோசர்களில் Tyrannosaurus Rex மற்றும் Velociraptor இனங்கள் காணப்பட்டதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.
இவ் இரு வகை டைனோசர்களும் ஊன் உண்ணிகளாகவே காணப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாவர உண்ணி டைனோசர் இனம் ஒன்று இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த இனமானது டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இனமானது எவ்வாறான தோற்றத்தினைக் கொண்டிருக்கும் என்பதற்கான சில சான்றுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கான ஆராய்ச்சியை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து Natural History Museum உம் மேற்கொண்டிருந்தது.
இதன் அடிப்படையில் குறித்த இனமானது 145 வருடங்களுக்கு முன்னர் ஜுராசிக் காலப்பகுதியில் காணப்பட்டதாகவும் இவை 3 மீற்றர்கள் நீளமான உடலைக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றின் உடல் அமைப்பானது சிறிய மண்டையோட்டைக் கொண்டதாகவும், நீண்ட கழுத்தினை உடையதாகவும் காணப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/science/03/130870

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக