தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஆகஸ்ட், 2017

வாழைப்பழத் தோலில் இவ்வளவு அற்புதமா? 1/2 மணி நேரத்தில் ஏற்படும் மாற்றம்!

வாழைப்பழத்தோலை கொண்டு நமது சருமத்தின் அழகை அதிகரிக்க செய்யலாம்.
அதற்கு வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழத்தின் தோலை எப்படி பயன்படுத்தலாம்?
  • வாழைப்பழத்தோலின் உட்பகுதியை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 1/2 மணி நேரம் கழித்து, முகத்தை சுத்தமான நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
  • வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துணியால் முகத்திற்கு ஒத்திடம் கொடுத்தால், தழும்புகள் மற்றும் பருக்கள் விரைவில் மறையும்.
  • வாழைப்பழத்தோலின் உட்பகுதியில் உள்ள வெள்ளை நார்ப்பகுதியை எடுத்து கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கண்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வீக்கங்கள் குறையும்.
  • வாழைப்பழத்தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால், பற்களின் மஞ்சள் கறைகள் நீங்கி, வெண்மையாக பளிச்சிடும்.
  • உடம்பில் வலிகள் உள்ள இடங்களில் வாழைப்பழத் தோலை 1/2 மணி நேரம் வைத்திருந்தால் போதும், வலிகள் உடனே போய்விடும்.
  • கொசுக்கள் கடித்து வீங்கி இருக்கும் இடத்தில், வாழைப்பழத்தின் தோலை நன்றாக தேய்த்தால், சிறிது நேரத்தில் சருமம் பழைய நிலைக்கு மாறிவிடும்.
http://news.lankasri.com/beauty/03/130972

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக