தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஆகஸ்ட், 2017

அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்களை கொண்ட கோவில்: எங்குள்ளது தெரியுமா?

அதியமான் நெடுமான் எனும் மன்னன் ஆண்ட பகுதிகளுக்குட்பட்ட தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் இரண்டரை டன் எடை கொண்ட பல்லவ மன்னர் கட்டிய கோயில் அமைந்துள்ளது.
தரைக்கு மேல் 2 செமீ உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த தூண்களில் சிவபெருமான் நடன மாந்தர்களின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் மேற்கூரையில் ஒன்பது நவ கிரகங்களின் உருவங்கள் அதன் வாகனங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கு நிகராக இந்த கோயிலின் அம்மன் ஸ்ரீகல்யாண காமாட்சி என்று அழைக்கப்படுகிறது.
மற்ற கோவிலை விட இந்த கோவிலில் மட்டும் அம்மன் அந்த சக்கரத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். இது இந்த கோவிலின் கூடுதல் மகிமை என்று நம்பப்படுகிறது.
இந்த அம்மன் சன்னதியை 18 யானைகள் தாங்கிக்கொண்டிருக்கின்றது. காமத்துக்கு உதாரணமாக விளங்கும் கடவுளர்களான காமேஸ்வரரும் காமேஸ்வரியும் இணையும் சிலைகள் இங்கு அமைந்துள்ளது.
இங்கு ஸ்ரீசைலத்துக்கு நிகராக தோன்றிய சிவலிங்கம் உள்ளது. அதோடு தீர்த்தங்கரர்களின் சிலைகளும் இங்கு அமைந்துள்ளது.
இந்த கோயிலில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் வித்தியாசமான முறையில் அமர்ந்திருக்கிறார்.
http://news.lankasri.com/travel/03/130979

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக