தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

உங்க தாடை எப்படி இருக்கு? நீங்க இப்படிபட்டவர் தானாம்

ஒருவரின் தாடையை வைத்தே அவருடைய குணநலன்களை கண்டுபிடிக்க முடியுமாம்.
வட்ட வடிவம்
வட்ட வடிவ தாடை கொண்டவர்கள் கூட்டு முயற்சியின் மேல் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள், தலைமைப்பண்பு மேலோங்கி இருப்பதுடன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சிறிய மற்றும் நேர் வடிவம்
பிறருடன் மிக எளிதாக பழகிவிடும் நபர்கள் அதிகம் சென்சிட்டிவாக இருப்பார்கள், எதிலும் பொறுமை என்பதே இருக்காது. சட்டென பேசிவிட்டு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்கள்.
சதுர வடிவம்
மிக எளிதில் பிறரை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டாலும், சுயமாக முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். தன்னுடைய எண்ணங்களை முகத்திற்கு நேராக சொல்லும் பழக்கம் உடையவர்கள், பிடிவாதம் அதிகம் இருக்கும்.
முன்நீட்டிய தாடை
சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள், தன்னுடைய இலக்கை அடைவதற்காக கடும் முயற்சி செய்வார்கள், தலைமைப்பண்பு மேலோங்கி இருக்கும்.
நீளமான தாடை
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள், தொலைநோக்கு பார்வையுடன் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சாமர்த்தியம் அதிகம், எப்போதும் தனக்கு நெருக்கமான நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இரட்டை தாடை
அதிர்ஷ்டசாலிகளான இவர்கள் எப்போதும் உறுதியுடன் செயல்படுவார்கள், தோற்றுப்போனாலும் விரைவில் மீண்டு வருவார்கள்.
பிளவுபட்ட தாடை
என்றென்றும் இளமையுடன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம், ரிஸ்க் எடுப்பதெல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல!!!
http://news.lankasri.com/lifestyle/03/130669

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக