தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சூரிய கிரகணத்தில் தோஷம் உண்டாகும் நட்சத்திரம்? இதுல உங்க நட்சத்திரம் இருக்கா?

அமாவாசை நாளில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
அதாவது சூரியன்- சந்திரனிடம் இருந்து வெளிச்சம் வராமல் ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த ராகு, கேது கிரகணத்தை விட, சூரிய கிரகணம் தோஷம் தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.
கிரகண தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்?
  • கருச்சிதைவு மற்றும் குழந்தை பேறின்மை ஏற்படுதல்.
  • குழந்தைகளுக்கு அடிக்கடி நோயினால் பாதிக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறக்கும்.
  • பணியிடத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் மற்றும் ஏமாற்றம் ஏற்படும்.
கிரகண பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி?
கிரகண பாதிப்பில் இருந்து விடுபட சாஸ்திரங்கள் சில வழிகளை கூறுகிறது. அதாவது, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
நம் வீட்டின் பூஜை அறையில் கிரகணம் முடியும் வரை ஜபங்கள், பாராயணங்கள் செய்ய வேண்டும்.
கிரகண கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட, நாம் அணிந்த உடைகளை நீரில் நனைத்து துவைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
சூரியக் கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை?
சூரிய கிரகணம் நிகழும் போது அதை நேரடியாக பார்க்கக் கூடாது, அப்போது சமையல் செய்யவோ, சாப்பிடவோ மற்றும் நகத்தை கிள்ளவோ கூடாது.
சூரியக் கிரகணத்தினால் தோஷம் ஏற்படும் நட்சத்திரம்?
சூரிய கிரகணம் மகம் நட்சத்திரத்தில் ஏற்படும், அதனால் மகம், அசுவினி, மூலம், ரேவதி, பூரம் போன்ற நட்சத்திரங்களுக்கு தோஷம் ஏற்படும்.
எனவே இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் சூரிய பகவானுக்கு சாந்தி பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டும்.
http://news.lankasri.com/astrology/03/131131

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக