கையெழுத்தின் அழுத்தம்
கையெழுத்து போடும் போது, ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் ஆகியவை குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்பிறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராகவும், அதிக பிடிவாத குணமும் உடையவராக இருப்பார்கள்.
கையெழுத்து காகிதத்தின் பின்பிறம் தெரியவில்லை எனில், அவர்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக் கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் மற்றவர்களின் விருப்பப் படி, நடந்துக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
கையெழுத்தின் கோணம்
கையெழுத்து போடும் போது, வலது புறம் சரிவாக இருந்தால், அவர் திறந்த மனதுடன் பழகுவார்கள். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர்கள்.
அதுவே இடதுபுறம் சாய்வாக எழுதினால், அவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குபவர்களாக இருப்பார்கள்.
கையெழுத்துக்கள் நேராகவும், எழுதும் வார்த்தைகள் நேர்கோட்டிலும் அமைந்து இருந்தால், அவர்கள் திட்டமிட்டு வாழ்வதுடன், சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் அதை சமமாக எடுத்துக் கொள்பவராக இருப்பார்கள்.
கையெழுத்தின் அளவு
கையெழுத்து போடும் போது, பெரிய அளவில் அழுத்தமாக இருந்தால், அவர்களுக்கு மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். அதுவே சிறிய அளவில் இருந்தால், அவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.
பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள், சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல் மற்றும் செயலில் தன்னம்பிக்கை இருக்கும்.
கையெழுத்தின் இடைவெளி
கையெழுத்து போடும் போது, வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் நெருக்கமாக இருந்தால், அவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். அந்த நண்பர்களிடம் நெருக்கமாகவும் இருப்பார்கள்.
ஆனால் நல்ல அல்லது தீய நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் அதிகம் நெருக்கம் காட்டுவார்கள்.
மேலும் இத்தகைய எழுத்துக்களை எழுதுபவர்கள் எதிலும் ஒழுங்கான தன்மையை கையாள மாட்டார்கள். இவர்களிடம் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் குணம் இருக்காது.
கெயெழுத்து போடும் போது வார்த்தைகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால், அவர்கள் அதிக செலவாளியாக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கையெழுத்தின் எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி சீராக இருந்தால், அவர்கள் புத்திசாலிகளாக, நட்பு பாராட்டுபவர்களாக திகழ்வார்கள்.
http://news.lankasri.com/lifestyle/03/130026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக