தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நகத்தின் அதிசயம்: வியக்க வைக்கும் உண்மைகள்

நகம் என்பது ஒரு கூர்மையான ஆயுதத்தைப் போன்றது. இது மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு இரையை பிடிப்பதற்கும், இரையை கிழித்து உண்பதற்கும் உதவுகிறது.
நகம் என்பது என்ன?
தோலானது கெராட்டின் எனும் புரதச்சத்தின் மூலம் கடினமாகி நகங்களாக மாறுகிறது.
நகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், கை விரல்களில் ஒரு நாளில் 0.1-0.2 மில்லிமீட்டர் வரையிலும் கால் விரலில் 0.05 மில்லிமீட்டர் நீளம் வரையிலும் வளர்ச்சி அடையும்.
நகத்தின் இந்த வளர்ச்சி உடல் ஆரோக்கியம், சூழ்நிலை, தட்பவெப்பம் ஆகியவை பொறுத்து அமைகிறது.
நகத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?
நகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளால் ஆனது. இதன் அடித்தளத்தில் நகம் உருவாகும் இடமான நெயில் மாட்ரிக்ஸ் அமைந்துள்ளது.
இந்த நெயில் மாட்ரிக்ஸ் ரத்த நாளங்களின் மூலம் தேவையான ஊட்டச்சத்தினை பெற்று, அவற்றைக் கொண்டு கெராட்டினை உற்பத்தி செய்கிறது.
நெயில் மாட்ரிக்ஸ் என்றால் என்ன?
நெயில் மாட்ரிக்ஸ் என்பது நகங்களுக்கு இடஹ்யம் போன்றவை. போதுய அளவு பிராணவாய்வு, ஈரப்பதம் இல்லையெனில் நகத்தின் உற்பத்தி சரியாக இருக்காது.
எனவே நகத்தை சுரண்டுவது, நகத்தின் மீது ரசாயனம் மிகுந்த பசையை விரல்கள் மூலம் பயன்படுத்துவது போன்ற பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து நகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நகத்தில் பிறை வடிவம் இருப்பது ஏன்?
கட்டை விரலின் கீழ்ப்பாகத்தில் பிறை சந்திரன் வடிவம் போன்று சிலருக்கு காணப்படும்.
அது நெயில் மாட்ரிக்ஸ் உற்பத்தி செய்த கடினப்படாத தோலின் பாகம் ஆகும். ஆனால் இது மற்ற விரல்களில் பொதுவாக தெரியாது.
நகம் வெட்டும் போது வலிப்பதில்லை ஏன்?
நமது கை மற்றும் கால் விரல்களில் புதிதாக வளர்ந்த நகம், பழைய நகத்தை வெளியே தள்ளுகிறது. அவ்வாறு வெளியே வளர்ந்து வந்த உயிரற்ற நகத்தினை வெட்டும் போது நமக்கு வலி தெரிவதில்லை.
ஆரோக்கியமான நகம் எப்படி இருக்கும்?
கை மற்றும் கால் விரல்களில் உள்ள நகங்கள் பிங்க் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அவர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.
ஆனால் அதுவே நகம் வேறுநிறத்தில் அல்லது வளைந்து இருந்தால், அவர்களுக்கு உடல் நிலையில் எதோவொரு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.
http://news.lankasri.com/health/03/130904

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக