தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நம் உடம்பிலேயே தங்கம் உள்ளது என உங்களுக்கு தெரியுமா?

தங்கம் என்பது நமது வாழ்வின் உயரிய நிலையை காட்டும் பொருளாக விளங்குகிறது. தங்கத்தை சில அரசுகள் நாணயமாகவும் பயன்படுத்தியுள்ளனர் என அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன.
இப்படி மக்களால் அதிகம் போற்றப்படும் தங்கம் நமது உடலிலும் இருக்கிறது என ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மனித உடலில் பல்வேறு கூறுகள் உள்ளன, அவற்றில் தங்கம் உட்பட சில கூறுகளும் சிறிய அளவில் அடங்கும்.
ஜான் எம்ஸ்லே என்பவர் எழுதிய த எலிமெண்ட்ஸ் - மூன்றாம் பதிப்பு என்னும் நூலில் 70 கிலோ எடை கொண்ட சராசரி மனிதரின் உடலில் 0.2 மில்லிகிராம் தங்கள் அடங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட வடிவில் இந்த தங்கத்தின் அளவு 10 நானோ லிட்டர்களாக இருக்கும். இதை திடமான கனசதுரமாக உருவெடுத்தால் ஒவ்வொரு பக்கத்தின் அளவும் 0.22 மில்லிமீட்டர் இருக்கும் எனவும் நூலில் எழுதப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள தங்கத்தின் செயல்பாடுகள் என்ன?
  • எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தங்கம் உதவுகிறது.
  • உடல் முழுவதும் மின்சார சமிக்ஞைகளை பரிமாற்றம் செய்யவும் தங்கம் உதவிபுரிகிறது.
  • மனித உடலில் 1.0 கிராம் சில்லிக்கான் உள்ளது. இயற்கையான முறையில் பெறப்படும் தங்கத்தில் இது அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/living/03/130473

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக