தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

வீட்டின் தலை வாசல் இப்படி அமைத்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும் என்பது குறித்த பல விடயங்கள் மனை சாஸ்திரத்தில் உள்ளது.
தென் மேற்கு திசை வீடு
தென் மேற்கு திசையை பார்த்தவாறு வாசல் இருந்தால் அந்த வீட்டில் தீய சக்திகள் உள்ளேறும். அதனால் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்ல வாய்ப்பை இழக்க நேரிடுவீர்கள்.
ஆனால் ஃபெங் சூயி சாஸ்திரப்படி, அந்த மாதிரியான வீட்டில் செல்வ செழிப்பு புரளும் யோகம் இருந்தால், முதல் 3-4 வருடங்களுக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்.
தென் கிழக்கு திசை வீடு
தென் கிழக்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு இருந்தால், அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நல குறைவு, கோபம், வழக்குகள் போன்றவற்றை சந்திக்கக் கூடும்.
இவ்வகை வீடுகளில், தலைவாசல் கதவுகளின் வெளிப்பக்கமாக காயத்ரி மந்திரம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டுவதுடன், உரிய ஆலோசனையோடு கோரல், மஞ்சள் மாணிக்க கல் மற்றும் செம்பு போன்ற கற்களை பயன்படுத்தி இந்த கதவின் குறையை சற்று குறைக்கலாம்.
தெற்கு பார்த்த வீடு
தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ள தலைவாசல் கதவுகள், கெட்ட சக்தியை உள்ளே கொண்டுவரும். இது வீட்டிலுள்ள நேர்மறையான சக்தியை சீர் குலைத்து, வீட்டில் உள்ளவர்களிடையே சண்டை மற்றும் வாக்குவாதத்தை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனையை தடுக்க அனுமான் படம் பதித்த படம், டைல்ஸ் கற்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கதவுகளின் வெளிப்பக்கமாக பதித்து வைக்க வேண்டும்.
மேற்கு பார்த்த வீடு
மேற்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு அமைந்திருந்தால், அது சுறுசுறுப்பான திறனையும், கொண்டாட்ட திறனையும் அளிக்கும். அதனால் இளைஞர்களுக்கு இது மிகவும் நல்லதாக அமையும்.
வடமேற்கு திசை வீடு
வடமேற்கு திசையை நோக்கி தலைவாசம் அமைந்திருந்தால், பெரிய ஆபத்து ஒன்றும் இருக்காது. அதனுடன் சேர்ந்து மற்ற வாஸ்து விதிமுறைகள் படி வீடு இருந்தால், ஆரோக்கியம், பொருள் வளம், செல்வம் என அனைத்தும் பெருகும்.
ஆனால் வீட்டின் வாசல் கதவு மேற்கு நோக்கி இருந்தால், அந்த வீட்டின் முதன்மையான ஆண் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அதே போல் வடக்கை நோக்கி இருந்தால், அவ்வீட்டின் பெண் இருக்க மாட்டார்கள்.
குறிப்பு
கிழக்கு, வடக்கு, வட கிழக்கு போன்ற திசைகளை நோக்கி வீட்டின் தலைவாசல் இருந்தால் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
http://news.lankasri.com/home-garden/03/129983

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக