ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். ஆனால், வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...
- வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.
- சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.
- தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
- பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
- உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.
http://news.lankasri.com/spiritual/03/127775?ref=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக