தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 ஜூன், 2017

கீதையில் கிறிஸ்ணன் சொன்னது.....


அர்ஜுனா! கல்ப முடிவில் எல்லா உயிர்களும் என் சக்தியில் ஒடுங்குகின்றன. கல்ப ஆரம்பத்தில் மீண்டும் அவற்றை நான் தோற்றுவிப்பேன்.

உயிர்களின் தலைவனான என்னை எனது மேலான இயல்பை அறியாத மூடர்கள் மனித உடலை எடுத்துள்ளவன் என்று என்னை அவமதிக்கிறார்கள்.

இந்த உலகின் தந்தையாக, தாயாக, வினைப்பயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதப்படுத்துபவனாகவும் வேதங்களாகவும் நானே இருக்கிறேன்.

மரணமின்மையும் மரணமும், தோற்றத்திற்கு வந்ததும், தோற்றத்திற்கு வராமல் இருப்பவையும் நானே.

வேறு எதையும் நினைக்காமல் என்னையே நினைத்து, யார் எங்கும் என்னையே வழிபடுகிறார்களோ, மாறாத உறுதி கொண்ட அந்த பக்தர்களின் வாழ்க்கைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

குந்தியின் மகனே! எந்த பக்தர்கள் மற்ற தெய்வங்களை நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ, அவர்களும் உண்மையைச் சரியாக அறியாமல் என்னையே வழிபடுகிறார்கள்.

இலை, பூ, பழம், நீர் போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனதையுடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கிறேன். எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை. யார் என்னை பக்தியுடன் போற்றுகிறார்களோ, அவர்கள் என்னிடம் உள்ளார்கள், நானும் அவர்களிடம் உள்ளேன்.

மனத்தை என்னிடம் வைத்து, என்னை மேலான கதியாகக்கொண்டு, மன உறுதியுடன் என்னை வழிபட்டால் என்னையே அடைவார்கள்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக