தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஜூன், 2017

பசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில் பாலைப் பொழிந்தது யாருக்காக?

பசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில் பாலைப் பொழிந்தது யாருக்காக? கதையை அறிவோமா? ஆகாசராஜனின் மகளான பத்மாவதியை ஶ்ரீநிவாஸன் மணந்துகொள்ள முடிவுசெய்தபோது திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன் சென்றது. அந்தக் கூட்டத்தினர் ஆயிரம் பொற்குடங்களைச் சுமந்துகொண்டு சென்றனர். அந்தக் குடங்கள் பசும்பாலால் நிறைந்திருந்தன. யார் இவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள் என்று எல்லோருக்கும் ஆச்சர்யம்.
பசு
மகாலட்சுமியை, பரந்தாமன் பிரிந்து வைகுண்டத்திலிருந்து வந்தபின், பூவுலகில் பல இடங்களில் சுற்றித் திரிந்தார். மகாலட்சுமியை எங்கெங்கெல்லாமோ தேடியலைந்தார். கடைசியில், திருவேங்கடமலைக்கு வந்துசேர்ந்தார். அந்த இடமும் அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் அமர்ந்து தவம் புரியத் தொடங்கி விட்டார்.
சில நாள்களில், அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, அவரையே மூடிவிட்டது. உள்ளே பரந்தாமன் பசியால் வாடிக் கொண்டிருந்தார். அதையறிந்த சிவபெருமானும் பிரம்ம தேவனும் பசுவும் கன்றுமாக உருமாறி வந்து தினமும் அந்தப் புற்றில் பால் சொரிந்தனர். அந்தப் பாலைப் பருகி பசியைப் போக்கிக் கொண்டார்.
புற்று
இந்தச் செய்தியை சூரிய தேவன் மூலம் அறிந்துகொண்ட மகாலட்சுமி பரந்தாமன் மீது இருந்த கோபத்தில் இருந்தார். மகாலட்சுமி யாதவப் பெண்ணாக உருமாறி வந்து புற்றில் பால் சொரிந்த பசுவையும் கன்றையும் இழுத்துச் சென்று காளஹஸ்திக்கு அருகிலுள்ள சோழராசன் என்னும் சிற்றரசனிடம் விற்றுவிட்டார்.
ஆனால், காளஹஸ்தி அரண்மனையிலிருந்து மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டுக்கு வரும் பசு, அங்கிருந்து குறுக்கு வழியாக சீனிவாசன் தவம் செய்துகொண்டிருக்கும் இடத்துக்கு வந்துவிடும். வழக்கம் போல் புற்றின் மேல் பாலைப் பீய்ச்சிவிட்டுச் சென்றுகொண்டு இருந்தது.
சிவா
இதனால் மாலையில் பால் கறக்கும்போது, அந்தப் பசுவிடமிருந்து பால் வரவில்லை.. பசுவை மேய்க்கும் காவலன் இதை மகாராணியிடம் கூறினான். 'பகல் நேரத்தில் அந்தப் பசு என்ன செய்கிறது' என்பதைக் கவனிக்குமாறு மகாராணி அவனுக்கு உத்தரவிட்டார்.
வழக்கம்போல் பசு மறுநாள் மேய்ச்சலுக்காக அருகிலுள்ள காட்டுக்குச் செல்லும்போது, பால் கறக்கும் காவலனும் அதைப் பின்தொடர்ந்து சென்றான். பசு குறுக்கு வழியில் புற்று இருக்கும் இடத்துக்குச் சென்று பால் சொரிவதைப் பார்த்தான்.
மாலையில் மன்னனையும் மகாராணியையும் சந்தித்து, பசு என்ன செய்தது என்பதை விவரித்தான். 'மறுநாளும் பசு இப்படிச் செய்தால் பசுவை அங்கேயே நன்றாக நாலு அடி போடு' என்று கூறினான். அரசனும், 'அந்தப் புற்றில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது' என்பதைத் தானே நேரில் வந்து பார்ப்பதாகத் தெரிவித்தான்.
பத்மாவதிக் கல்யாணம்
மறுநாள், காட்டுக்குச் சென்ற பசு, வழக்கம்போல் குறுக்கு வழியில் புற்று இருக்குமிடத்துக்குச் சென்று பால் சொரிந்ததைக் கண்ட காவலன் தன் கையிலிருந்த ஆயுதத்ததால் பசுவை வேகமாகத் தாக்கினான். ஆனால், ஆயுதம் பசுவின்மீது படவில்லை. அதற்கு மாறாகப் பசுவின்மீது ஆயுதம் பட்டுவிடக் கூடாது என்றெண்ணி அதைத் தடுப்பதற்காக அவசரமாக எழுந்த சீனிவாசன் மீது பட்டது. திடுமென்று தோன்றிய அவரையும் அவரது காயத்தையும் கண்டு அரண்மனை வேலைக்காரன் மயங்கிக் கீழே விழுந்தான்.
பின்தொடர்ந்து வந்த சோழராசன், சீனிவாசப் பெருமாளின் தரிசனம் கண்டான். உடனே அவரது பாதங்களில் விழுந்து தன் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினான். தான் செய்த பாவத்துக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினான்.
எனது திருமணநாளன்று ஆயிரம் பொற்குடங்களில் பால் எடுத்து வந்து திருமண வீட்டில் சமர்ப்பித்தால் சாப விமோசனம் ஏற்படும் என்றும் கூறி மறைந்தார். சோழராசன்தான், சாபவிமோசனம் பெறுவதற்காக ஆயிரம் பொற் குடங்களில் பால் எடுத்து வந்திருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக