கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை 1 டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2 முறைகள் குடிக்க வேண்டும்.
- ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க வேண்டும்.
- 40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இம்முறையை ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட வேண்டும்.
- சிறிதளவு நீரில் கறிவேப்பிலை, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
மருத்துவ நன்மைகள்
- கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
- கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. எனவே இது இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
- கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டீரியல், வாயுத் தொல்லை, பித்தம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, வயிற்றில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுத்து, வயிற்றை சுத்தமாக்க உதவுகிறது.
http://news.lankasri.com/health/03/127284?ref=right_featured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக